Thursday, May 31, 2018
ஜிம்மில் கடும் ஒர்க்கவுட்டில் சினேகாவா இது!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்த சினேகா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
தனது உடல் எடை அதிகமாகி விட்டதால் முதற்கட்டமாக எடை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக கணவர் பிரசன்னாவின் உதவியோடு ஜிம்மில் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சினேகா, புதிய பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளியானது இலங்கையின் புதிய வரைபடம்!
இலங்கையின் புதிய வரைபடம் மறுசீரமைக்கப்பட்டு தற்பொழுது வெயிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்பிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்று இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது.
வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வரைபடத்தில் 1:500 எனும் விகிதத்திலே இலங்கைக்கான புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகநகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மொஹரகந்த நீர்த்தேக்கம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான கட்டமைப்பு ஆகியன இணைக்கப்பட்டுள்ளன.
துறைமுகநகரமானது காலிமுகத்திடலிலிருந்து 269 ஹெக்டயர் நிலப்பரப்பினை மேலதிக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த தெரிவிக்கையில்,
இலங்கையின் இடப்பரப்பானது தொடர்ச்சியாக மாற்றங்களுக்குட்பட்டுவருகின்றது. இலங்கையில் பாரிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வண்முள்ளமையால் இன்னும் சில வருடங்களில் இலங்கை வரைபடத்திற்கு மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.
இந்நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிறப்பிக்கும் இறப்பிற்கும் இடையில் எப்படி இருக்கவேண்டும் மனிதன்?
*பிறப்பிற்கும்*
*இறப்பிற்கும் இடையில்,*
*நீ செய்யும்* *பாவம்*
*புண்ணியம்* *மட்டுமே*
*உனக்கு மிஞ்சும்...*
*உன்னுடன் கடைசி*
*வரை வருவதும்*
*இதுவே...!!*
01) பெற்றோர்களை
நோகடிக்காதே...
நாளை உன் பிள்ளையும்
உனக்கு அதை தான்
செய்யும்...!!
02) பணம் பணம் என்று
அதன் பின்னால்
செல்லாதே...
வாழ்க்கை போய்
விடும்...
வாழ்க்கையையும்
ரசித்துக் கொண்டே
போ...!!
03) நேர்மையாக இருந்து
என்ன சாதித்தோம்
என்று நினைக்காதே...
நேர்மையாக இருப்பதே
ஒரு சாதனை தான்...!!
04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
சோதனை வருவது
தெரிந்ததே, அதற்காக
நேர்மையை கை விட்டு
விடாதே...
அந்த நேர்மையே
உன்னை
காப்பாற்றும். ..!!
05) வாழ்வில் சின்ன சின்ன
விஷயத்திற்கெல்லாம்
கோபப்படாதே...
சந்தோஷம்
குறைவதற்கும்,
பிரிவினைக்கும் இதுவே
முதல் காரணம்...!!
06) உன் அம்மாவிற்காக
ஒரு போதும்
மனைவியை விட்டு
கொடுக்காதே...
அவள் உனக்காக
அப்பா அம்மாவையே
விட்டு வந்தவள்...!!
07) உனக்கு உண்மையாக
இருப்பவர்களிடம்...
நீயும் உண்மையாய்
இரு...!!
08) அடுத்தவர்களுக்கு தீங்கு
செய்யும் போது
இனிமையாகத்தான்
இருக்கும்...
அதுவே உனக்கு வரும்
போது தான், அதன்
வலியும் வேதனையும்
புரியும்...!!
09) உன் மனைவி
உண்மையாக இருக்க
வேண்டும் என்று, நீ
நினைப்பது போல்...
நீயும் உண் மனைவிக்கு
உண்மையாய் இரு,
எந்த பெண்ணையும்
ஏறெடுத்து பார்க்காதே,
அதுவே உன்
மனைவிக்கு கொடுக்கும்
மிகப்பெரிய பரிசு...!!
10) ஒருவன் துரோகி
என்று தெரிந்து
விட்டால்...
அவனை விட்டு
விலகியே இரு...!!
11) எல்லோரிடமும்
நட்பாய் இரு...
நமக்கும் நாலு
பேர் தேவை...!!
12) நீ கோவிலுக்கு
சென்று தான்
புண்ணியத்தை
சேர்க்க வேண்டும்
என்பதில்லை...
யாருக்கும் தீங்கு
செய்யாமல்
இருந்தாலே...
நீ கோவில்
சென்றதற்கு சமம்...!!
13) நிறை குறை இரண்டும்
கலந்தது தான்
வாழ்க்கை...
அதில் நிறையை மட்டும்
நினை...
நீ வாழ்க்கையை
வென்று விடலாம்...!!
14) எவன் உனக்கு உதவி
செய்கிறானோ,
அவனுக்கு மட்டும்
ஒரு நாளும் துரோகம்
செய்யாதே...
அந்த பாவத்தை நீ
எங்கு போனாலும்
கழுவ முடியாது...!!
15) அடுத்தவர்களைப்
போல் வசதியாக
வாழ முடியவில்லை
என்று நினைக்காதே...
நம்மை விட
வசதியற்றவர்கள்
கோடி பேர்
இருக்கிறார்கள்
என்பதை மனதில்
கொள்...!!
16) பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடையில்,
நீ செய்யும் பாவம்
புண்ணியம் மட்டுமே
உனக்கு மிஞ்சும்...
உன்னுடன் கடைசி
வரை வருவதும்
இதுவே...!!
*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!
-படித்ததில் பிடித்தது
*இறப்பிற்கும் இடையில்,*
*நீ செய்யும்* *பாவம்*
*புண்ணியம்* *மட்டுமே*
*உனக்கு மிஞ்சும்...*
*உன்னுடன் கடைசி*
*வரை வருவதும்*
*இதுவே...!!*
01) பெற்றோர்களை
நோகடிக்காதே...
நாளை உன் பிள்ளையும்
உனக்கு அதை தான்
செய்யும்...!!
02) பணம் பணம் என்று
அதன் பின்னால்
செல்லாதே...
வாழ்க்கை போய்
விடும்...
வாழ்க்கையையும்
ரசித்துக் கொண்டே
போ...!!
03) நேர்மையாக இருந்து
என்ன சாதித்தோம்
என்று நினைக்காதே...
நேர்மையாக இருப்பதே
ஒரு சாதனை தான்...!!
04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
சோதனை வருவது
தெரிந்ததே, அதற்காக
நேர்மையை கை விட்டு
விடாதே...
அந்த நேர்மையே
உன்னை
காப்பாற்றும். ..!!
05) வாழ்வில் சின்ன சின்ன
விஷயத்திற்கெல்லாம்
கோபப்படாதே...
சந்தோஷம்
குறைவதற்கும்,
பிரிவினைக்கும் இதுவே
முதல் காரணம்...!!
06) உன் அம்மாவிற்காக
ஒரு போதும்
மனைவியை விட்டு
கொடுக்காதே...
அவள் உனக்காக
அப்பா அம்மாவையே
விட்டு வந்தவள்...!!
07) உனக்கு உண்மையாக
இருப்பவர்களிடம்...
நீயும் உண்மையாய்
இரு...!!
08) அடுத்தவர்களுக்கு தீங்கு
செய்யும் போது
இனிமையாகத்தான்
இருக்கும்...
அதுவே உனக்கு வரும்
போது தான், அதன்
வலியும் வேதனையும்
புரியும்...!!
09) உன் மனைவி
உண்மையாக இருக்க
வேண்டும் என்று, நீ
நினைப்பது போல்...
நீயும் உண் மனைவிக்கு
உண்மையாய் இரு,
எந்த பெண்ணையும்
ஏறெடுத்து பார்க்காதே,
அதுவே உன்
மனைவிக்கு கொடுக்கும்
மிகப்பெரிய பரிசு...!!
10) ஒருவன் துரோகி
என்று தெரிந்து
விட்டால்...
அவனை விட்டு
விலகியே இரு...!!
11) எல்லோரிடமும்
நட்பாய் இரு...
நமக்கும் நாலு
பேர் தேவை...!!
12) நீ கோவிலுக்கு
சென்று தான்
புண்ணியத்தை
சேர்க்க வேண்டும்
என்பதில்லை...
யாருக்கும் தீங்கு
செய்யாமல்
இருந்தாலே...
நீ கோவில்
சென்றதற்கு சமம்...!!
13) நிறை குறை இரண்டும்
கலந்தது தான்
வாழ்க்கை...
அதில் நிறையை மட்டும்
நினை...
நீ வாழ்க்கையை
வென்று விடலாம்...!!
14) எவன் உனக்கு உதவி
செய்கிறானோ,
அவனுக்கு மட்டும்
ஒரு நாளும் துரோகம்
செய்யாதே...
அந்த பாவத்தை நீ
எங்கு போனாலும்
கழுவ முடியாது...!!
15) அடுத்தவர்களைப்
போல் வசதியாக
வாழ முடியவில்லை
என்று நினைக்காதே...
நம்மை விட
வசதியற்றவர்கள்
கோடி பேர்
இருக்கிறார்கள்
என்பதை மனதில்
கொள்...!!
16) பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடையில்,
நீ செய்யும் பாவம்
புண்ணியம் மட்டுமே
உனக்கு மிஞ்சும்...
உன்னுடன் கடைசி
வரை வருவதும்
இதுவே...!!
*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!
-படித்ததில் பிடித்தது
யாழில் பரபரப்பு! பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு! விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.
இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளாரா? அல்லது வேறெதும் சம்பவங்கள் இடம்பெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.











