தனது மகள் தனது சுவிஸ் நண்பனால் கர்ப்பமாக்கப்பட்ட விரக்தியில் 38 வயது அரச அலுவலரான பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 15 வயதான மகள் கர்ப்பமாகி யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கர்ப்பம் கலைக்கப்பட்ட சம்பவம் குறித்த பெண் அலுவலரின் கணவருக்கு தெரியவந்து கணவர் பொலிசாருக்கு அது தொடர்பாக அறிவிக்க முற்பட்ட நிலையிலேயே குறித்த பெண் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது.
நடந்தது என்ன?
யாழ் நல்லுார் பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பப் பெண் ஜெயா (பெயர் மாற்றம்). ஜெயாவின் கணவர் ரகு (பெயர் மாற்றம்) யாழில் உள்ள பிரபலபாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர். இருவரும் 2007 ம் ஆண்டு திருமணம் செய்து இரு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்துள்ளனர். இந் நிலையில்
தனது தம்பியாரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொரோனாவுக்கு பின்னர் 2022ம் ஆண்டளவில் கணவருக்கு தெரியாது தனது தாலிக்கொடி தவிர்ந்த ஏனைய நகைகளை வங்கியில் ஈடு வைத்தும் தனது சொந்த வங்கிக் கணக்கில் இருந்த 12 லட்சம ரூபா பணம் பெற்றும் மொ்ததமாக 30 லட்சம் ரூபா பணத்தை தம்பியாரிடம் கொடுத்திருந்தார். தம்பியாரும் திருமணம் முடித்தவர். ஆனால் வெளிநாடு போகும் முயற்சி தோல்வியடைந்து தம்பியார் மீண்டும் திரும்பி வந்ததுடன் நகைகள் மற்றும் பணத்தை அக்காவுக்கு மீண்டும் கொடுக்க வழியில்லாது தவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜெயா விசேட நிகழ்வுகளுக்கு அணிந்து செல்லும் நகைகளைப் பார்த்த ரகு அது தொடர்பாக ஆராய்ந்த போது ஜெயா அணிந்திருந்த நகைகள் கவரிங் நகைகள் என தெரியவந்து அது தொடர்பாக விசாரணை நடாத்திய போது நகைகள் வங்கியில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வங்கயிலிருந்து ஜெயாவின் சேமிப்பும் எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்களுக்கிடையே எழுந்த மோதல் அடிதடியாகி பொலிஸ் நிலையம் வரை சென்று முடிந்துள்ளது. அதன் பின்னர் ரகு தனது மனைவியை விட்டு பிரிந்து வாழத் தொடங்கியிருந்தார்.
ஜெயாவின் இரு பெண் பிள்ளைகளும் பிரபல பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜெயாவுடன் வாழ்ந்து வந்தாலும் தமது தந்தையான ரகுவை மறக்கவில்லை. ரகுவை இரு பிள்ளைகளும் சந்தித்து வந்திருந்தார்கள். அதற்கு ஜெயா பல தடவைகள் தடை ஏற்படுத்தியும் பிள்ளைகள் ரகுவைச் சந்திப்பதை ஜெயாவால் தடுக்க முடியாது போயிருந்தது.
கணவனின் பிரிவுக்கு பின் ஜெயா பாடசாலை நண்பனான கச்சேரி நல்லுார் வீதியைச் சேர்ந்தவனும் தற்போது சுவிஸ்லாந்தில் வசித்து வருபவனுமாகிய 38 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான சுஜீந்திரன் என்பவனுடன் சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். தனது நிலையை சுஜீந்திரக்கு கூறியுள்ளார். இதனை சாக்காக வைத்து சுஜீந்திரன் கடந்த 2 வருடங்களில் 3 தடவைகள் சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளான். ஜெயாவையும் அவளது இரு பிள்ளைகளையும் சுவிஸ்லாந்துக்கு ஸ்பொன்சர் பண்ணுவதாக பீலா விட்டு ஜெயாவின் மண்டையை கழுவியுள்ளான்.
அவனது துாண்டுதலில் ஜெயா தனது 2 பிள்ளைகள் மற்றும் தனக்கும் பாஸ்போட் எடுத்து ஆயத்தமாகியுள்ளாள். இவ்வாறான நிலையில் கடந்த ஆவணி மாத நல்லுார் திருவிழாவுக்கும் சுஜீந்திரன் சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து நின்றிருந்தான். ஜெயாவும் பிள்ளைகளும் வெளிநாடு போவதற்கு பாஸ்போட் எடுத்த விடயம் தனத பிள்ளைகள் ஊடாக ரகு அறிந்திருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளான். யார் ஊடாக வெளிநாடு செல்லப் போகின்றாள் என்ற விடயம் பிள்ளைகளு்ககும் ஜெயா சொல்லாமலே பாஸ்போட் எடுத்து வைத்திருந்தாக தெரியவருகின்றது. நல்லுார் திருவிழா நாட்களில் ஜெயாவின் வீட்டுக்கு பல தடவைகள் சுஜீந்திரன் வந்து சென்றிருந்தான்.
ஓரிரு வாரங்களாக ரகுவால் தனது இரு பிள்ளைகளையும் அணுக முடியாதிருந்துள்ளது. ரியூசன் மற்றும் பாடசாலை ஆகியவற்றுக்கு ஜெயாவே மகள்களை இறக்கி ஏற்றி திரிந்ததுடன் மகள்களை கடும் கட்டுப்பாடாக வெளியே விடாது வைத்திருந்துள்ளாள். இந் நிலையில் கடந்த வாரம் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் மூத்த பிள்ளையை தாயுடன் கண்டதாக ரகுவுக்கு தகவல்களை யாரோ வழங்கியுள்ளார்கள். அதன் பின்னர் அலேட்டான ரகு மகள் தொடர்பாக பாடசாலையில் விசாரித்த போது 2 கிழமைகள் மகள் பாடசாலைக்கு வரவில்லை எனவும காய்ச்சல் காரணம் எனவும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ரகு தனது 2 வது மகளை பாடசாலையில சென்று இடைவேளை நேரம் சந்தித்த போது தனது அக்கா 2 நாட்கள் பிரபல வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த விடயத்தை கூறியுள்ளாள்.
அவ் வைத்தியசாலைக்கு விரைந்த தந்தை அங்கு துப்பறிவு செய்த போது அவர்கள் பல தகவல்களை மறைத்துள்ளார்கள். அதன் பின்னர் தனது நெருங்கிய வைத்தியசாலை வட்டாங்கள் ஊடாக தகவல்களை அறிந்த போது மூத்த மகளுக்கு கருக்கலைப்பு நடந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரகு தனது மனைவியை நேரடியாக தொடர்பு கொண்டு தகவ்களை அறிய முற்பட்ட போது ஜெயா கூறாது மறுத்துள்ளார். அதன் பின்னா் பொலிசாரிடம் முறையிட முற்பட்ட போதே ஜெயா தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது.
தற்போது யாழில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயா உயிர் ஆபத்தற்ற நிலையில் உள்ளார். தனது மூத்த மகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது பாடசாலையிலிருந்து வீட்டில் தனியே நிற்கும் போது தங்கை ரியூசனுக்கு சென்ற பின் அங்கு வரும் சுஜீந்திரன் தன்னுடன் அ்ததுமீறி நடந்ததுள்ளதாகவும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஜெயாவிடம் சொல்ல வேண்டாம் எனக் கூறி பல தடவைகள் தன்னை அச்சுறு்ததி பாலியல் உறவு கொண்டதாக மகள் கூறியுள்ளார்.
கணவன் ரகு மற்றும் அவரது நெருக்கமானவர்களால் குறித்த தகவல் எமக்கு அனுப்பபட்டுள்ளது. சுஜீந்திரனின் சில அந்தரங்க வீடியோக்கள் 15 வயது மகளுக்கு ஜெயா கொடுத்திருந்த சிமாட் போனிலிருந்து ரகுவால் மீட்கப்பட்டு எமக்கு அனுப்பபட்டுள்ளது. சுஜீந்திரன் தொடர்பாக முறையான புகார் ஒன்று பொலிசாருக்கு கொடுக்கப்படவுள்ளதாக ரகு தரப்புத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஜீந்திரனை இலக்கைக்கு கொண்டு வந்து சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது, அத்துடன் ஜெயாவிடமிருந்து முறையான விவாகரத்துப் பெற்று பிள்ளைகளை தன்னுடன் வைத்திருப்பதற்னான நடவடிக்கைகளையும் ரகு சட்டரீதியாக மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.






0 comments:
Post a Comment