நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, November 19, 2025

பிரான்சில் இருந்து வந்து திருமணம் செய்த இளம் குடும்பஸ்தர் கரணவாயில் வெட்டுக்கொலை !!



பிரான்சில் இருந்து வந்து திருமணம் செய்த  இளம் குடும்பஸ்தர் கரணவாயில் வெட்டுக்கொலை !!

கரணவாய் கூடாவளவு பகுதியில் கடந்த இரவு பயங்கரம் !   

குற்றவாளிகளை   தீவிரமாக தேடும்  நெல்லியடி பொலிஸார் !

கரணவாய் பகுதியில்  பகுதியில் நேற்றிரவு   12:00 மணியளவில்    ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர்  இனம் தெரியதாக நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டநிலையில் சம்பவிடத்தில்  இருந்து  சந்தேக நபர்கள்  செல்லும் காட்சி சி சி ரி காமரவில் அப்பகுதியில் பதிவாகியுள்ளது    

நேற்றிரவு 12:00 மணியளவில் தொலை பேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர்  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்  அவரை பின்தொடர்ந்து சென்ற கொலை  குற்றவாளி  இளம் குடும்பஸ்தர் மீது  கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர்

அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும்  ஒரு குற்றவாளியின்  ரீ செட் ஒரு பகுதி இளைஞரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது  கொலை செய்யப்பட்ட இளைஞர்  மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும்   ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபரகள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி  சி சி ரீ காமரவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பிரான்ஸ் நாட்டில் இருந்து  திரும்பி வந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத்திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது ,   

 கொலைக்கான காரணம் இதுவரை அறியமுடியவில்லை ,  நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார்  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர் ,   மிக விரைவாக  குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்கள்    இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சநிலையை உருவாக்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
 
#jaffnanews #tamilnew #newstamil #Info #paristamil #jafnna #rksmoli

0 comments:

Post a Comment