அடங்காத கா மம்! நாளுக்கொரு ஆண் நண்பர்களுடன் உல்லாசம்!! யாழில் தாய் மாமனால் பச்சை பனை மட்டையால் அடித்துக் கொல்ல்பபட்ட 24 வயது நிவேதா!1 நடந்தது என்ன?
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் நேற்றையதினம் (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் மரணவிசாரணை மேற்கொள்ளப்பட்ட போதும், வைத்தியர்கள் சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், யுவதியின் உடலில் பல பாகங்களில் கடுமையான கண்டல் காயங்கள் அடையாளம் காணப்பட்டன.
யுவதியின் கால், கை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான கண்டல் காயங்கள் ஏற்பட்டு, குருதிக்கசிவு காரணமாக யுவதி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த யுவதி தாய் – தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனும், மாமனுடனும் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஒருவித உளநல சிக்கல்கள் இருந்ததால், தங்ககம் ஒன்றிலும் விடப்பட்டிருந்தார். எனினும், அங்கிருந்து ஓடிவந்து விட்டார்.
இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டிலிருந்த ரூ.40,000 பணத்தை எடுத்துச் சென்று, புதிய கையடக்க தொலைபேசியொன்றை வாங்கியதுடன், பின்னர் பல ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்துள்ளார்.
யுவதியின் தாயின் தம்பி, யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கண்டறிந்து, வேறொரு ஆணைப் போல பேசி, யுவதியை குறிப்பிட்ட இடமொன்றுக்கு வரவழைத்து, வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
பின்னர், பச்சை தென்னம்மட்டை வெட்டி, யுவதியை கடுமையாக தாக்கியுள்ளார் மாமன்.
அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து திரும்பிச் சென்றது.
பொலிஸார் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரையும், மற்றொரு இளைஞனையும் கைது செய்துள்ளனர். யுவதியை தாக்கி தும்பாக மாறிய மட்டையையும் பொலிசார் மீட்டுள்ளனர்.ம






0 comments:
Post a Comment