தனது பல்கலைக்கழக காதலிக்கு போதைப்பொருள் பழக்கி பலருக்கு இரையாக்கிய மாணவக் காவாலி!!
தனது காதலிக்கு போதைப்பொருள் பாவனையைப் பழக்கி அவளை பலருக்கு இரையாக்கி வந்துள்ள பல்கலைக்கழக மாணவன் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் பிடிபட்ட 22 வயதான யுவதி தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த யுவதி பல்கலைக்கழக மாணவி என்பதும் அவளது காதலனால் குறித்த மாணவி போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியது தொியவந்துள்ளது. இருவரும் போதைப்பொருள் பெறுவதற்காக பல்வேறு வழியில் பணத்தை திரட்டி போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார்கள். அவ்வாறே கொழும்பில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் மாணவி வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி பணம் பெற்று தனது காதலனுடன் போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார். நாளொன்றுக்கு இருவரும் போதைப்பொருள் பாவிப்பதற்கு 15 ஆயிரம ரூபா வரை செலவு செய்து வந்துள்ளார்கள். குறித்த மசாஜ் விடுதியில் சந்தித்த சில ஆண்களுடன் குறித்த மாணவி பாலியல் ரீதியாக உறவைப் பேணி அதற்காக பெருமளவு பணத்தைப் பெற்று வந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment