கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமத்திபால மற்றும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ஷ, உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியுடன் பேசி கொண்டிருக்கும் போது, நாமல் கேள்வி ஒன்றை வினவியுள்ளார்.
“ஜனாதிபதி அவர்களே என்னை கைது செய்தது பரவாயில்லை.. ஏன் எனது தம்பி யோஷிதவை கைது செய்தீர்கள்...?” என வினவியுள்ளார்.
“எனக்கு தெரியாது.. அந்த அமைச்சின் அதிகாரம் என்னிடம் இல்லை. அது பிரதமரிடம் தான் உள்ளது..” என ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
“அப்படி என்றால் எனது தம்பியை கைது செய்ததற்கும் உங்களும் எந்த தொடர்பும் இல்லையா”? என நாமல் வினவியுள்ளார்.
அந்த சம்பவம் தொடர்பில் தனக்கு ஒன்றும் தெரியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, சாகல ரத்நாயக்கவிடமே உள்ளது. அதன் செயற்பாட்டுடன் நான் தொடர்புப்படவில்லை. அழுத்தம் பிரயோகிக்கவும் இல்லை..” என ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்ச அந்த சந்தர்ப்பத்திலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பொன்று மேற்கொண்டுள்ளார். “நான் ஜனாதிபதியுடனே உள்ளேன். யோஷிதவை கைது செய்தமைக்கும், ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் கூறினார், அனைத்தையும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தான் செய்துள்ளார்” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
“சரி.. சரி..! எனது மகனை கைது செய்தவர்களை நான் பார்த்து கொள்கின்றேன்” என கூறி விட்டு மஹிந்த தொலைபேசியை துண்டித்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மஹிந்த தரப்பினருக்கு மக்கள் வழங்கிய பாரிய ஆதரவினை அடுத்து மஹிந்தவின் எச்சரிக்கை வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment