ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.
துமிந்த திஸாநாயக்க உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
16 பேர் அரசாங்கததில் இருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்ட நேரத்திலும் ஜனாதிபதியுடன் இருந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியை சேர்ந்த 11 பேரே இவ்வாறு நேற்றைய கூட்டத்தை பகிஷ்கரித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரகசியமான முறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பில் இருப்பதாக பேசப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலர் கைவிட்டு சென்ற நிலையில், அவருக்கு பலம் சேர்க்கும் வகையில் அவருடன் இருந்தவர்கள் குறித்து எவ்வித கரிசனையும் கொள்ளாது மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை தொடர்பாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியுடன் இருந்த தம்மை கூட்டு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தன் பின்னணியிலும் ஜனாதிபதியே இருந்திருக்கக் கூடும் என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment