நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, November 3, 2018

ரணில் வீட்டுக்காவலில்!


ரணில் விக்ரமசிங்க தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போது இடம்பெயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக்கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவே உலகில் தன்னை தானே வீட்டுக்காவலில் வைத்துக்கொண்டமைக்கான முதல் உதாரணம்.

இவர்கள் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எந்தளவுக்கு நாட்டை சூரையாடியது என்பது தற்போது தெரிகின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்று சிறிது நேரத்தில் எரிபொருள் விலையை குறைக்க முடிந்தது. பெருமளவில் வரிச் சுமையை குறைக்க முடிந்தது. சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் இரத்து செய்யப்பட்டது“ என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment