Thursday, February 22, 2024
விபத்தில் பலியான யாழ் பல்கலை மாணவன் சகீந்தன் வெளிநாட்டு கூலிப்படை காவாலி!! அதிர்ச்சி வீடியோ
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் கூடப் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரிய வந்தது.
மானிப்பாயிலுள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும் தெரிய வந்தது. விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரிய வந்தது.
உயிரிழந்த மாணவன் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதிகாலை 4 மணியளவில் உடுப்பிட்டியில் தாக்குதல் நடந்தது.
இது குறித்து பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் உள்ள உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, ஹைஏஸ் வாகனத்துக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் நண்பனும் இணைந்து இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது விபத்து நிகழ்ந்தது.
கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் ஒருவரின் வீடு புகுந்து வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், ஹைஏஸ் வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளனர். எனினும், வீட்டிலிருந்தவர்கள் எச்சரிக்கையடைந்ததும், அவர்கள் தப்பியோடி விட்டனர்.
அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்லும் போதே நீர்வேலி, சிறுப்பிட்டி பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்தார். அவரது வயிற்றின் கீழ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பல்சர் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி பகுதி தாக்கியதால் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்தை தொடர்ந்து, நண்பர்களுக்கு அறிவித்து, சம்பவத்தை மறைக்க அந்த இடத்தை சுத்தம் செய்து, தடயங்களை மறைத்ததுடன், காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியுள்ளனர்.
அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு எடுத்து சென்று மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
விபத்தில் உயிர்தப்பி சிகிச்சை பெறும் இளைஞன் அடிக்கடி வெவ்வேறு தகவல்களை வழங்கியது தெரிய வந்துள்ளது. ஒரு தலை காதல் விவகாரத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்தவரே குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அதற்கு வாய்ப்பில்லையென்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான வீட்டு உரிமையாளர், யாழ்ப்பாணம்- கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளார். வீட்டு உரிமையாளர் கிளிநொச்சியில் காணியொன்று கொள்வனவு செய்த போது, வெளிநாட்டிலுள்ள ஒருவருடன் தகராறு எழுந்தது. காணி உரிமையாளரின் உறவினரான வெளிநாட்டு வாசி, உடுப்பிட்டியிலுள்ளவருக்கு தெலைபேசியில் கொலை மிரட்டல்களும் விடுத்திருந்தார். இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் கொழும்பில் பொலிஸ் முறைப்பாடும் செய்திருந்தார்.
இந்த பின்னணியிலேயே, அவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது.
காயமடைந்து சிகிச்சை பெறுபவர் கூறிய தகவலின்படி, ஒரு தலை காதல் விவகாரத்துக்கான எந்த சூழலும் இல்லையென கருதப்படுவதால், வெளிநாட்டிலுள்ள ஒருவரால் கூலிப்படையாக அனுப்பப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
Saturday, February 3, 2024
இலங்கைச் சிறுமியின் அந்த ரங்க வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல்!! நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?
இலங்கையை சேர்ந்த சிறுமி என குறிப்பிடப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலி யல் துஷ்பி ரயோக வீடியோ, ஆ பாச இணையங்களில் பதிவேற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், அமெரிக்காவில் காணாமல் போன சிறார்களை தேடி கண்டறியும் அமைப்பு (NCMEC), இலங்கை காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஒன்பது வயது சிறுமியின் காட்சிகளுடன் இணையத்தில் பரவிவரும் இந்த காணொளி
உண்மையில் இலங்கையைச் சேர்ந்த சிறுமியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காணொளியா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருந்தால், அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (2) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
உண்மைகளை பரிசீலித்த நீதவான், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கூறி விசாரணைக்கு அனுமதி வழங்கினார்.
Friday, February 2, 2024
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் அதிரடி கைது!
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து, அவரிடம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் குழந்தையை பிரசவித்த கொலஸ்ரிகாவும் குழந்தையும் பலி!! காரணம் என்ன?
யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (31-02-2024) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த 28 வயதான அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் 6 மாத காலம் கர்ப்பிணியாக காணப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் 24ஆம் திகதி வீடு திருப்பியுள்ளார்.பின்னர் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை 2 மணித்தியாலங்களில் உயிரிழந்தது.இதேவேளை, குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பெண்ணின் சடலம் இன்றையதினம் (01-02-2024) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.














