இலங்கையை சேர்ந்த சிறுமி என குறிப்பிடப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலி யல் துஷ்பி ரயோக வீடியோ, ஆ பாச இணையங்களில் பதிவேற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், அமெரிக்காவில் காணாமல் போன சிறார்களை தேடி கண்டறியும் அமைப்பு (NCMEC), இலங்கை காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஒன்பது வயது சிறுமியின் காட்சிகளுடன் இணையத்தில் பரவிவரும் இந்த காணொளி
உண்மையில் இலங்கையைச் சேர்ந்த சிறுமியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட காணொளியா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருந்தால், அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (2) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
உண்மைகளை பரிசீலித்த நீதவான், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கூறி விசாரணைக்கு அனுமதி வழங்கினார்.
0 comments:
Post a Comment