கொல்கத்தா:
11வது ஐபிஎல் தொடர் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டி சென்றது.
இந்த ஐபிஎல் தொடரில் வீரர்கள் மட்டுமல்ல சில பார்வையாளர்களும் ரசிகர்களை கவர்ந்திருந்தனர்.அவ்வாறு பார்வையாளர்களை கவர்ந்தவர்களில் ஷாருக்கானின் மகள் சுகானாவும் ஒருவர்.
சுஹானா ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது சிறுமியாக இருந்தார் ஆனால் இப்போதோ பதின் பருவ பெண்ணாக மாறி உள்ளார்.
இந்நிலையில் இவரது தந்தையின் சொந்த அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுவரை முன்னேறி தோல்வி அடைந்தது.அப்பாவின் அணி விளையாடும் போட்டிகளில் சுஹானாவை நாம் பெரும்பாலும் காணலாம் இதன் மூலம் அவருக்கு சில ரசிகர்களும் உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் சுஹானா கொல்கத்தா அணியின் இளம் வீரர் ஒருவர் மீது காதல் கொண்டிருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.அந்த வீரர் வேறு யாரும் இல்லை ஐபிஎல்லில் கலக்கிய யு-19 வீரர் சுபமன் கில் தான் அது.
சுபமன் கில் யு -19 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
ஐபிஎல்லிலும் சிறப்பாக விளையாடினார்.பிளே ஆப் போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்த போதும் இறுதிவரை போராடினார் சுபமன் கில்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இடையில் சுஹானா மற்றும் சுபமன் இடையே காதல் மலர்ந்து இருப்பதாக உறுதிப்படத்தப்படாத செய்திகள் வெளிவருகின்றன.
0 comments:
Post a Comment