குழந்தை இல்லாமைக்கு சிகிச்சை எடுக்கும் தம்பதிகளில் உள்ள ஆண்களுக்கு மன அழுத்தம் இருந்தால், கருத்தரிப்பு வாய்ப்பு மிகவும் குறைவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இந்த ஆய்வின்படி, தம்பதிகளில் அதிக அளவு மனஅழுத்தம் இல்லாத ஆண்களால் கருத்தரிப்பு மற்றும் குழந்தை பிறப்பு நிகழ்வதை விட, அதிக அளவு மனஅழுத்தம் கொண்ட ஆண்களால் கருத்தரிக்கும் வாய்ப்பு 60 சதவீதம் வரை குறைவதாக தெரியவந்து உள்ளது.
மற்றொருபுறம், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் எந்த வகையிலும் குழந்தை பிறப்பின் விகிதத்தை பாதிப்பது இல்லை என்று தெரியவந்து உள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்தர் ஈசென்ஸ்பெர்க், தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனித நல மேம்பாட்டு கழகத்தைச் சேர்ந்த யூனைஸ் கென்னடி ஷிரிவர் கூறுகையில், "குழந்தை இன்மைக்கு சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் அவர்களின் மருத்துவர்களுக்கு இடையே, சிகிச்சை தீர்மானங்களை மேற்கொள்ள, எங்கள் ஆய்வின் மூலம் கிடைத்த இந்த புதிய தகவல் பயன்படும்" என்றனர்.
இதற்கு முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வரும் பெண்களில் 41 சதவீதம் பேருக்கு, மனஅழுத்தத்தின் அறிகுறிகள் இருப்பதாக, ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இன்-விட்ரோ ஃபெர்டிலிசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஆண்களைக் குறித்த மற்றொரு ஆய்வில், ஏறக்குறைய 50 பேரில் மனஅழுத்தம் அனுபவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேற்கண்ட இந்த ஆய்விற்காக, ஐவிஎஃப் அல்லாத சிகிச்சைகளை மேற்கொள்ளும் தம்பதிகளில், மனஅழுத்தத்தின் பங்கை குறித்து அறியும் வகையில் 1,650 பெண்கள் மற்றும் 1,608 ஆண்களை வைத்து, இந்த அணியினர் ஆய்வை நடத்தி தகவலை பெற்றனர். இதில் பெண்களில் 5.96 சதவீதம் பேரில் அதிகளவிலான மனஅழுத்தம் இருப்பதாகத் தெரிந்தது. ஆண்களோடு ஒப்பிடும் போது, 2.28 சதவீதம் பேருக்கு இருந்தது.
ஆன்டி டிப்ரேஷன்ட்ஸ் பயன்படுத்தவர்கள் உடன் ஒப்பிடும் போது, எஸ்எஸ்ஆர்ஐ-கள் அல்லாததை பயன்படுத்தும் பெண்களில், முதல் மூன்று மாதங்களில் கரு இழப்பு ஏற்படுவது சுமார் 3.5 முறைகள் ஆகும்.
0 comments:
Post a Comment