Wednesday, January 31, 2024
கனடாவில் கனேடிய தமிழர் பேரவை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!!
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதில் நாம் உறுதியாக உள்ளோம்.
இதேவேளை, அலுவலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, January 30, 2024
கனடாவிலிருந்து யாழ் வந்து 18 வயது மாணவியை கர்ப்பமாகிய 47 வயது அங்கிள்!! வங்கி உத்தியோத்தரான தாயுடனும் உறவு!!
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 47 வயதான மன்மதனால் மாணவி ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். யாழ் தென்மராட்சிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவரை விட்டுப் பிரிந்து வாழும் தனியார் வங்கி ஒன்றின் பெண் உத்தியோகத்தரின் மகளே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரின் உறவினரான கனடாவில் வசிக்கும் குடும்பஸ்தரே இக் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவருகின்றது. கனடாவிலிருந்து வந்து மாணவியின் வீட்டிலேயே குறித்த நபர் பல தடவைகள் இரவிலும் தங்கியிருந்துள்ளார். அத்துடன் சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தாய் வங்கிக்கு சென்ற நேரத்திலும் மாணவியுடன் உல்லாசமாகத் திரிந்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தைப்பூசத்தினத்தில் கோயிலில் நடந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட குறித்த மாணவி சாப்பிட்டு முடித்ததும் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதனால் கோயிலில் கூடியிருந்த மாணவியின் அயலவர்கள் மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே மாணவி கர்ப்பமான விடயம் அவர்களுக்கு தெரிந்துள்ளது. மாணவி மயக்கமடைந்த செய்தி தாயாருக்கு தெரிவிக்கப்பட்டு தாயாரும் வைத்தியசாலைக்கு வந்துள்ளார். அதன் பின்னர் நடந்த விசாரணைகளின் போது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் கனடா அங்கிள் என தெரியவந்துள்ளது.
அயலவர்களின் தகவலின்படி தாயார் மோசமான நடத்தையுடையவர் என்றும், அதனாலேயே அவரை விட்டு கணவர் பிரிந்து சென்றார் என்றும் தெரியவருகின்றது. குறித்த கனடா அங்கிள் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மாணவியின் தாயாரின் மாமா மகன் எனவும் தெரியவருகின்றது. குறித்த நபர், மாணவியின் தாயாருடன் திருமணத்திற்கு முன்னரே தவறான உறவில் ஈடுபட்டுவந்ததாகவும் அதன் காரணமாக மாணவியின் பாட்டா குறித்த நபரை கடுமையாக தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.
Saturday, January 20, 2024
மாவைக்கு அல்வா கொடுத்தாரா செயலாளர்?: வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட பலர்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு மண்டபத்துக்குள் தன்னை அனுமதிக்கவில்லையென சசிகலா ரவிராஜ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (21) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், சசிகலா ரவிராஜ் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், இதனை தெரிவித்துள்ளார்.
தலைவர் தெரிவில் வாக்களிப்பதற்கான பட்டியலில் தனது பெயரும் உள்ளதாக கட்சியினால் அறிவித்தல் வழங்கப்பட்டு, திருகோணமலைக்கு அழைக்கப்பட்டதாகவும், திருகோணமலைக்கு வந்த பின்னர், தன்னை மண்டபத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் தனது பெயர் உள்ளதாக குறிப்பிட்ட, கட்சி தலைமை, இன்றைய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும், எனினும், இங்குள்ள பட்டியலில் தனது பெயர் இல்லையென்றும், பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதிலேயே கட்சிக்குள் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் உள்ளிட்ட பலர் மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.
இதேவேளை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி தலைவரினால் பட்டியல் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சி.சிறிதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
மண்டபத்துககுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மற்றும் சிலர் பலவேறு சந்தேகங்களை எழுப்பினர். கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம் கையொப்பம் இட, பேச முடியாத நிலையில் உள்ளதாக கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக அறிந்தோம். ஆனால் அவரது கையொப்பத்துடன் ஒரு பட்டியல் இங்குள்ளது. அதில், தலைவர் மாவை சேனதிராசா நியமித்த பட்டியல் உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தில் அப்போதைய செயலாளர் கி.துரைராசசிங்கம், சுமந்திரன் தரப்புடன் இணைந்து சதி செய்திருந்தார். அதனால் அவரது செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தற்போதைய பதில் செயலாளரும், சுமந்திரன் வெற்றியீட்டுவதற்காக, மாவையின் தொடர்பை துண்டித்து, அவர் அளித்த பட்டியலை நீக்கி, அவ்வாறான செயல்களில் ஈடுபட்டாரா என்ற எமது சந்தேகத்தை கட்சி நிவர்த்தி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வாக்களிக்க 12 பேர் புறக்கணிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியில் 330பேர் வாக்களிக்க தகுதியிருந்தும் 296 பேர் வரை மாத்திரமே வருகை தந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்த்தைச் சேர்ந்த 12பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, மகளிர் அணியின் செயலாளர், பொருளாளர், உப செயலாளர் ஆகியோர் வாக்களிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை விடவும் இந்த தேர்தலுக்கு அனைவரும் மும்முரமாக வாக்களித்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
Monday, January 15, 2024
யாழில் ஏ.எல் பரீட்சை முடிந்தவுடன் மாணவனும் மாணவியும் ஓட்டம்!! சினிமாபாணியில் பிடித்த உறவுகள்!! நிர்வா ணமாக்கி சித்திரவதை!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உயர்தர பரீட்சை முடிந்ததும், மாணவியுடன் தலைமறைவான இளைஞனை கடத்தி சித்திர வதை செய்து, கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகசநபர்கள் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும் கைது செய்ய கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேசத்திலுள்ள 21 வயதான மாணவனும், மாணவியும் காதல் வசப்பட்டிருந்தனர். தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் இருவரும் தோற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் (13) பரீட்சை முடிந்ததும், மாணவனும், மாணவியும் ஒன்றாக தலைமறைவாகி விட்டனர்.
இருவரும், முல்லைத்தீவில் உள்ள மாணவனின் உறவினர் வீடொன்றில் தங்கிருப்பதை அறிந்த மாணவியின் குடும்பத்தினர், சில அடியாட்களையும் அழைத்துக் கொண்டு இரண்டு வாகனங்களில் முல்லைத்தீவு சென்றனர்.
நேற்று, முல்லைத்தீவு சென்ற இந்த கும்பல், வீடொன்றில் தங்கியிருந்த மாணவனையும், மாணவியையும் பிடித்தனர். இருவரையும் தனித்தனியாக வாகனங்களில் ஏற்றி, யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.
மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மாணவனை, இருபாலையிலுள்ள அடியாள் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை அடித்து சித்திரவதை செய்தனர். மாணவியுடனான காதல் உறவை தொடரக்கூடாது என மிரட்டியுள்ளனர்.
அத்துடன், மாணவனின் ஆடைகளை களைந்து, நிர்வா ணமாக வீடியோ படமும் எடுத்தனர்.
மாணவனிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகளை பறித்ததுடன், அவரிடமிருந்து ஏரிஎம் அட்டையை பறித்து, அருகிலுள்ள மதுபானச்சாலையொன்றுக்கு சென்று, அந்த ஏரிஎம் அ்டையின் மூலம் 4500 க்கு மதுபானம் கொள்வனவு செய்து அருந்தியுள்ளனர்.
பின்னர், மாணவனை விடுதலை செய்தனர்.
மாணவன் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய மாணவியின் தந்தை, தாயின் சகோதரி, மாணவியின் சகோதரன் ஆகியோர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
Saturday, January 13, 2024
யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் 14 வயதுச் சிறுமியுடன் செக்குறுட்டிகாட் ஜல்சா!! தாயார் பொலிசில் முறைப்பாடு!!
சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவருடன், பாதுகாப்பு உத்தியோகத்தர் சிறிது நேரம் மாயமாகியிருந்ததாக, சிறுமியின் தாயார் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று (12) இரவு இந்த சம்பவம் நடந்தது.
கொடிகாமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் தனது 14 வயது சிறுமியை காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
ஒன்றரை வயதான கடைசி மகளையும் பிறிதொரு நோய்க்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார். அவர் கடைசி மகளுடன் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 14 வயதான சிறுமி நோயாளர் விடுதியில் சிறிது நேரம் இருக்கவில்லை. இதன்போது, குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் எங்கேயென விசாரித்தபடி சிறுமியின் தாயார் விடுதிக்கு வந்தார்.
குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் விடுதியில் இருக்கவில்லை. அங்கிருந்த 3 பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் 2 பேர் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டு வெளியில் சென்றிருந்தனர்.
சற்று நேரத்தின் பின் சிறுமி விடுதிக்கு வந்தார். பாதுகாப்பு உத்தியோகத்தரும் வந்த பின், வைத்தியசாலை தரப்பினர் அது பற்றி பொலிசாருக்கு அறிவித்தனர்.
பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தவறான தொடர்பு கொண்டதாக தாயார் சுமத்திய குற்றச்சாட்டை சிறுமி மறுத்தார். தான் அவருடன் விடுதியின் பின்னாலிருந்து பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தான் ஏற்கெனவே பழகியதாகவும், அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாதென தாயார் கையில் சூடு வைத்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னுடன் கதைத்ததும், தாயாரின் கண்டிப்பை மறந்து அவருடன் பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாயார் தனது மகளை காணவில்லை, குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரையும் காணவில்லையென வைத்தியசாலை தரப்பில் முறையிட்டதுடன், இருவரும் “ஒன்றாக இருந்ததை“ சிறுமி ஒப்புக்கொண்டால், இந்த விவகாரத்தை பெரிதாக்காமல், இருவரையும் மணம் முடித்து வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் 16ஆம் திகதி சிறுமி பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்.
Wednesday, January 10, 2024
1996 காதல்… கள்ளக்காதலிலும் இவ்வளவு உருக்கமான சென்டிமென்டா?: தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொலையாளியின் வாக்குமூலம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பரிமாற்ற பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவை உத்தியோகத்தரான பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கஹதுடுவ பொலிஸார் சந்தேக நபரை நேற்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொலை வழக்கு தொடர்பாக சந்தேக நபரை 24 மணிநேரம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிவில் விமானசேவை உத்தியோகத்தரான பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கொலையாளி தனது வாக்குமூலத்தில் கூறியது: “நான் அவளுக்கு போன் செய்தாலும் அவள் அதற்க பதிலளிக்காததால் எனக்கு கோபம் வந்தது. அதனால் அவள் வேலை முடிந்து கஹதுடுவ நெடுஞ்சாலைக்கு வரும்போது அவளைக் கொல்லப் போவதாகச் சொல்லிவிட்டு அவள் என்னைத் தவிர்த்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக வீதியைக் கடந்தபோது அவளைக் கத்தியால் குத்தினேன்.
நான் அவளுடன் 1996 இல் டேட்டிங் செய்ய ஆரம்பித்தேன், நான் அவளை மிகவும் நேசித்தேன். இருப்பினும், எனக்கு 2000 இல் திருமணம் நடந்தது. எனக்குப் பிறகு அவள் ஒரு டொக்டரை மணந்தாள். பிறகு நீண்ட நாட்கள் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்தேன். எங்களுக்கு இடையேயான உறவில் எந்த இரகசியமும் இல்லை. எங்களுக்குள் அவ்வப்போது பல சந்தர்ப்பங்களில் சண்டைகள் வந்தாலும் அவைகள் ஒவ்வொரு முறையும் சமாதானமாகவே முடிந்தது. நான் அவளை வேலை முடிந்ததும் கஹதுடுவ நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்து எண்ணற்ற சந்தர்ப்பங்களில் எனது காரில் அழைத்து வந்து அவள் வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டேன்.
அனுருத்திகா என்னைத் தவிர்த்துவிட்டு வீதியின் மறுபுறம் சென்றபோது, எனக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை, நான் ஆத்திரத்தில் அவளைக் கத்தியால் குத்தினேன். அதன்பிறகு நான் இங்கு தங்கினால் பிரச்சனைகள் வரும் என்று எண்ணி வீடு திரும்பும் போது, அடிக்கடி வெளியூர் சென்று வருவதால், பயணச்சீட்டுக்கு உதவும் நண்பர் மூலம் டுபாய்க்கு விமான டிக்கெட் வாங்கினேன்.
காரை வீட்டில் வைத்துவிட்டு முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றதாகவும், அங்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக தான் ஆழமாக நேசித்த அனுருத்திகாவுக்கு செய்த செயலுக்கு வாழ்நாள் முழுவதும் வருந்துவேன் என்றார்.
கள்ளக்காதல் வெறி!! டொக்டரின் மனைவி 39 வயதான துலாஞ்சலி நடுவீதியில் குத்திக் கொலை!! நடந்தது என்ன?
நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் ஒருவரின் கழுத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
பிலியந்தலை, மடபட, ஜபுரலிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதான ஒரு குழந்தையின் தாயான சிவில் விமான சேவை அதிகாரி துலாஞ்சலி அனுருத்திகா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வைத்தியர் ஒருவரின் மனைவி.
சிவில் விமான சேவை அதிகார சபையில் பணியை முடித்துக் கொண்டு அலுவலக சேவை பேருந்தில் மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு வந்து, ஹொரணை கொழும்பு வீதிக்கு வந்து கொண்டிருந்த போது காரில் வந்த நபர் ஒருவரால் வாள்வெட்டு மற்றும் கழுத்தில் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கஹதுடுவ அதிவேக வீதி நுழைவாயிலில் இருந்து மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு பஸ்ஸில் வந்த போது காரில் வந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.கொலையாளியின் காரின் பதிவு எண் அனுராதபுரத்தைச் சேர்ந்தது என விசாரணையில் கண்டறியப்பட்டது.
திருமணத்திற்குப் புறம்பான உறவே இந்தக் கொலைக்குக் காரணம் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் விசா ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடம் ஒன்றில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது.
குற்றம் நடந்த இடத்தில் வீதி முழுவதும் இரத்தம் பரவியிருந்தது.கொலையாளி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட சமயத்தில் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Tuesday, January 9, 2024
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் அப்பாவிகள்!! உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன?
2015ஆம் ஆண்டு கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனு இன்று (9) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 22ம் திகதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.
2015 மே 14ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 18 வயதுடைய சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகளை யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு, 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி குற்றவாளிகளாக அறவித்து மரண தண்டனை விதித்துது.
தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது என அந்தந்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தம்மை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு கோரி, இந்த மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்
Monday, January 8, 2024
யாழில் பக்கத்துவீட்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது மொட்டையன்!! கொலை வெறியில் தேடும் உறவுகள்!!
யாழில் பக்கத்துவீட்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது மொட்டையன்!! கொலை வெறியில் தேடும் உறவுகள்!!
யாழ் ஆவரங்காலில் 16 வயதான பக்கத்து வீட்டு சிறுமியுடன் மாயமான 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது குடும்பஸ்தரை அவனது மனைவியின் உறவுகள் மற்றும் சிறுமியின் உறவுகள் கொலை செய்யும் வெறியில் தேடித் திரிவதாக தெரியவருகின்றது.
குறித்த குடும்பஸ்தர் ஹயஸ் வாகனம் வைத்திருப்பவர் எனவும் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு குறித்த குடும்பஸ்தரின் உயிரைக் காப்பாற்றும் படி அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளை குறித்த குடும்பஸ்தரான சந்திரப்பிரகாஸ் என்பவனை பிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் ரூபா சன்மான வழங்கப்படும் என உறவுகள் தெரிவித்துள்ளார்கள். இவனது சிறுமி கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
எப்படி போதைப்பொருள் கிடைக்கிறதென எனக்கே தெரியாது…’: யாழில் போதைப்பொருளுக்கு அடிமையன 21 வயது யுவதி அதிர்ச்சி வாக்குமூலம்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 21 வயதான யுவதியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (7) பருத்தித்துறை நீதிமன்றத்தில் யுவதியை முற்படுத்தி, அவரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்கும் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 21 வயதான யுவதியே கைது செய்யப்பட்டார். அவர் பெற்றோரை இழந்தவர். அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்கிறார்.
அவரது உறவினரான புலம்பெயர் தமிழர் ஒருவர் யுவதிக்கான பணத்தை அனுப்பி வருகிறார்.
அந்த யுவதி போதைக்கு அடிமையாகி விட்டார், அவர் கட்டுக்கடங்காமல் குழப்படி செய்கிறார், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை எடுத்து போதைப்பொருள் வாங்குகிறார் என்றும், அவரை புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுத்து தருமாறு அம்மம்மா, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து, குறிப்பிட்ட யுவதியை பொலிசார் கைது செய்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முற்படுத்தி. சட்ட வைத்திய அதிகாரி மூலமாக பரிசோதனை செய்தனர்.
யுவதி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையனவர் என பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் எவ்வாறு போதைக்கு அடிமையானார், எங்கிருந்து போதைப்பொருளை பெறுகிறார் என பொலிசார் விசாரணை நடத்திய போது, யுவதி அதற்கு முறையாக பதிலளிக்கவில்லை. தான் எங்கிருந்து போதைப்பொருள் பெறுகிறேன் என தனக்கே தெரியாது என்றும், எவ்வாறோ தன்னிடம் போதைப்பொருள் கிடைத்து விடுவதாகவும், பொலிசாரே கண்காணிப்பு கமரா பொருத்தி அதை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று (7) யுவதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Wednesday, January 3, 2024
கிளிநொச்சிக் காட்டுக்குள் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரைப் பிடிப்பது போல் ரோசிகனை பிடித்தது எதற்காக? வீடியோ
கிளிநொச்சிக் காட்டுக்குள் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரைப் பிடிப்பது போல் ரோசிகனை பிடித்தது எதற்காக? வீடியோ
வடக்கு மாகாண போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான தொலைபேசி இலக்கம் என, கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அங்கஜனின் சித்தப்பா ராஜனின் வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பலரும் தொடர்பு எடுத்து தெரியப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும் எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை.
ராஜனின் வீட்டு கேற்றுக்கு முன்பாக கூட, பாதுகாப்பு தரப்புக்கு செல்ல முடியவில்லை. இவ்வாறான நிலையில் கிளிநொச்சி காட்டுக்குள் கசிப்பு காய்ச்சிய பாலசுப்பிரமணியம் ரோசிகனை விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரை பிடிக்க சுற்றி வளைத்தது போல் சுற்றி வளைத்து பிடித்த காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.





















