2015ஆம் ஆண்டு கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேன்முறையீட்டு மனு இன்று (9) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 22ம் திகதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.
2015 மே 14ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 18 வயதுடைய சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகளை யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு, 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி குற்றவாளிகளாக அறவித்து மரண தண்டனை விதித்துது.
தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்திற்கு முரணானது என அந்தந்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தம்மை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு கோரி, இந்த மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்
0 comments:
Post a Comment