நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, January 8, 2024

எப்படி போதைப்பொருள் கிடைக்கிறதென எனக்கே தெரியாது…’: யாழில் போதைப்பொருளுக்கு அடிமையன 21 வயது யுவதி அதிர்ச்சி வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 21 வயதான யுவதியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (7) பருத்தித்துறை நீதிமன்றத்தில் யுவதியை முற்படுத்தி, அவரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்கும் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி  வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 21 வயதான யுவதியே கைது செய்யப்பட்டார். அவர் பெற்றோரை இழந்தவர். அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்கிறார்.

அவரது உறவினரான புலம்பெயர் தமிழர் ஒருவர் யுவதிக்கான பணத்தை அனுப்பி வருகிறார்.

அந்த யுவதி போதைக்கு அடிமையாகி விட்டார், அவர் கட்டுக்கடங்காமல் குழப்படி செய்கிறார், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை எடுத்து போதைப்பொருள் வாங்குகிறார் என்றும், அவரை புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுத்து தருமாறு அம்மம்மா, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து, குறிப்பிட்ட யுவதியை பொலிசார் கைது செய்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முற்படுத்தி. சட்ட வைத்திய அதிகாரி மூலமாக பரிசோதனை செய்தனர்.

யுவதி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையனவர் என பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு போதைக்கு அடிமையானார், எங்கிருந்து போதைப்பொருளை பெறுகிறார் என பொலிசார் விசாரணை நடத்திய போது, யுவதி அதற்கு முறையாக பதிலளிக்கவில்லை. தான் எங்கிருந்து போதைப்பொருள் பெறுகிறேன் என தனக்கே தெரியாது என்றும், எவ்வாறோ தன்னிடம் போதைப்பொருள் கிடைத்து விடுவதாகவும், பொலிசாரே கண்காணிப்பு கமரா பொருத்தி அதை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று (7) யுவதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job