மனைவியைப் பழி வாங்க மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய கனடா செந்துாரனின் திருவிளையாடல்!!
கனடாவை வதிவிடமாகக் கொண்ட மகாலிங்கம் செந்துாரன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயது குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவரை சட்டவிரோதமாக திருமணப் பதிவுகள் அற்ற நிலையில் சேர்ந்து வாழ்ந்து வருவதுடன் அப் பெண்ணை 5 மாத கர்ப்பிணியாக்கியுள்ளதாகவும் செந்துாரனின் மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு கனடா சென்ற யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியைச் சேர்ந்த செந்துாரன் 2016ம் ஆண்டளவில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த யுவதியை திருமணம் முடித்து கனடாவுக்கு வரவழைத்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு செந்துாரன் தன்னை கடுமையாகத் தாக்கியதாக கூறி பொலிசாரிடம் முறைப்பாடு செய்து செந்துாரன் சில நாட்கள் சிறையில் இருந்துள்ளதுடன் சிறையிலிருந்து வந்த பின்னரும் மனைவியின் வீட்டுப் பக்கம் செல்லக்கூடாது என்ற கடும் நிபந்தனை பொலிசாரால் விதிக்கபட்டிருந்தது.
இதனையடுத்து அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்த செந்துாரன் தனது மனைவியின் தங்கையுடன் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளார்.
மனைவியின் தங்கையும் பதிவுத்திருமணம் முடித்தவர் என்பதுடன் அவரது கணவன் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டு தற்போது பெலாறஸ் என்ற நாட்டில் பிடிபட்டு அங்குள்ள சிறையில் இருப்பதாக தெரியவருகின்றது. செந்துாரனின் மனைவியின் தங்கை தற்போது சிறையில் இருக்கும் கணவனை காதலித்தே திருமணம் முடித்திருந்தாராம. தற்போது செந்துாரனால் 4 மாத கர்ப்பமாகியுள்ள மனைவியின் தங்கையை செந்துாரன் வைத்தியசாலை மற்றும் கிளினிக்குகளுக்கு ஏற்றி இறக்கி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது பிள்ளைகளுடன் கொழும்பு வந்துள்ள செந்துாரனின் மனைவி தனது கணவனின் சட்டவிரோத திருமணம் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளதுடன் நீதிமன்றில் சட்டநடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment