இவர்தான் அந்த மோசடிமிக்க நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்; முறைப்பாடுகளை வழங்கலாம்!
ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி சுரசிங்க விஜேரத்னவால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் தொடர்பாக சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அறுவைச் சிகிச்சைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 77 பேரிடமிருந்து ஆணைக்குழு இதுவரை வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
EVD மற்றும் VP SHUNT எனப்படும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை கருவிகளைப் பயன்படுத்தி இந்த மருத்துவ நிபுணர் செய்த அறுவைச் சிகிச்சைகள் குறித்து முக்கியமாக சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந்த நிபுணர் மருத்துவர் வெளியார் நிறுவனங்களிலிருந்து அறுவைச் சிகிச்சை கருவிகளைப் பெற நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதால் நோயாளிகள் இழப்புகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்ட 2025/066 அறிக்கையில் இது தொடர்பாக வேறு பல குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இந்த முறைகேடுகள் குறித்து தகவல் உள்ள வேறு நபர்கள் ஆணைக்குழுவுக்கு மேலதிக தகவல்களை வழங்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கோரியுள்ளது.
மேலும், 1954 என்ற எண்ணுக்கு அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் நடந்த சம்பவத்தை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் விசேட மருத்துவரின் நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணை நடத்தவும் செயற்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் முக்கிய நோக்கம் நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் மருத்துவமனை அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் ஆகும் என்று ஆணைக்குழு கூறுகிறது.
0 comments:
Post a Comment