யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிருசாந்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பின் கிருசாந்தியை கொன்றவர்களில் ஒருவனான இராணுவச் சிப்பாய் கூறிய தகவல்களின் படி 600 தமிழர்களுக்கு மேல் செம்மணிப் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தாக மரணதண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் கூறியிருந்தான். 1996ம் ஆண்டு மே மாதம் தொடங்கி 1996ம் ஆண்டு குறித்த இராணுவச்சிப்பாய் பிடிபடும் வரையான ஒக்ரோபர் மாத காலப்பகுதியில், கிட்டத்தட்ட 180 நாட்களில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களில் எவரும் குழந்தைகளுடன் காணாமல் போகவில்லை. அதே நேரம் யாழ் அரியாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கிட்டதட்ட 50 க்கும் குறைவானவர்களே காணாமல் போனவர்கள். இவர்கள் பற்றி எம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பலரின் பெயர் விபரங்களை நாம் வெளியிடுவோம்.
யாழ் குடாநாட்டில் காணாமல் போனவர்களில் பெருமளவானர்கள் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களோ அல்லது யாழ்ப்பாணத்தின் எனைய பகுதிகளில் காணாமல் போனவர்களோ செம்மணிப் பகுதிக்கு கொண்டு வந்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு கட்டளைத்தளபதிகள் மற்றும் பிரிகேடியர்களின் பொறுப்பில் இருந்த பிரதேசங்களாகும். எந்த எந்த இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டார்களோ அப்பிரதேசங்களிலேயே அவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம். அதே நேரம் குடாநாட்டில் காணாமல் போனவர்கள் ஒரே நாளில் காணாமல் போகவில்லை. ஒவ்வொரு நாளும் காணாமல் போனார்கள். அவர்களை ஓரிடத்தில் வைத்து கும்பலாக கொல்வதற்கு சாத்தியமில்லை.
செம்மணியில் எலும்புகளாக மீட்கப்பட்டவர்கள் யாராக இருக்கும்.?
நிச்சயம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பூநகரி, நாச்சிக்குடா மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து புலிகளுக்கு தெரியாமல் படகில் வந்து அரியாலை கிழக்குப் பகுதியில் இறங்கிய அப்பாவிகளே செம்மணிப்பகுதியில் புதையுண்டுள்ளார்கள். இவர்களில் பெருமளவானவர்கள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரியாலைப் பகுதியில் இராணுவத்திடம் வந்த போது இவர்களைப் பிடித்து கொட்டுக்கிணற்றடி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்று அவர்களிடமிருந்த நகைகள், பணங்களை கொள்ளையடித்து பெண்களை கொடூரமாக கற்பழித்த பின் பெண்கள், குழந்தைகள் என்று பாகுபாடு இன்றி அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களே தற்போது எலும்புகளாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
1996ம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதலின் பின்னர் உடனடியாகவே ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி படைநகர்வு ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் படைநகர்வில் இடம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு , ஐ.நாவின் உதவிகளில் வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதற்கான கூடாரத்திற்கான படங்குகள் மற்றும் பிள்ளைளுக்கான புத்தகப்பைகள் என்பன கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பையே தற்போது மீட்கப்பட்டிருக்கலாம்.
அரியாலை கிழக்கில் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கிய அப்பாவிகளை ஒவ்வொரு கடும் சித்திரவதை செய்து கொலை செய்து கூட்டம் கூட்டமாக 5 மாதத்துக்குள் குறித்த பகுதியில் படையினர் புதைத்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment