Tuesday, November 19, 2024
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படப் போகின்றது!
கடந்த 16.11.2024 அன்று குறிப்பிட்டவாறு எதிர்வரும் 23.11.2024 அன்று கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இது 25.11.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் அதேவேளை 26.11.2024 அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையின் படி இது ஒரு புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையின் படி இதன் நகர்வு பாதை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து, பின்னர் வடக்கு மாகாணத்தை அண்மித்து(தற்போதுள்ள நிலையில் இது கரையைக் கடக்கும் போது இதன் உள் வளையத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும், வெளிவளையத்துக்குள், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களும் அடங்குகின்றன) தமிழ்நாட்டின் கடலூர் புதுச்சேரிக்கிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ( கரையைக் கடக்கும் இடம் மாற்றம் பெறலாம்).
இதன் காரணமாக எதிர்வரும் 25.11.2024 முதல் 29.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 26.11.2024 மற்றும் 27.11.2024ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
இதன் காரணமாக எதிர்வரும் 24.11.2024 முதல் 28.11.2024 வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை தொடர்ந்து கிடைக்கும்.
அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே….
இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும்.
எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது.
– நாகமுத்து பிரதீபராஜா –
வவுனியா பாடசாலையில் ஆசிரியரை மாணவிக்கு ‘மாமா’ வேலை பார்க்கச் சொன்ன காவாலி!! மறுத்த ஆசிரியர் மீது தாக்குதல்!!
வவுனியா பாடசாலையில் ஆசிரியரை மாணவிக்கு ‘மாமா’ வேலை பார்க்கச் சொன்ன காவாலி!! மறுத்த ஆசிரியர் மீது தாக்குதல்!!
வவுனியா, வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று (19) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த வாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஆசிரியர் மீது அன்றையதினம் மாலை குறித்த ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (18) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னரும் இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் குறித்த பாடசாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் மீண்டும் கொடூரம்!! வைத்தியசாலையில் குழந்தை பிறப்பிற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் மரணம்.
மன்னாரில் மீண்டும் கொடூரம்!! வைத்தியசாலையில் குழந்தை பிறப்பிற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் மரணம்.
மன்னார் வைத்தியசாலையில் இன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே இன்றையதினம் செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்தாகவும் வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளனர்
வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம் பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்கு சொல்லாமல் மறைத்ததாகவும் உயிர் இழந்த பெண்ணின் உடலை கூட பார்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன்
குறித்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில் சம்பவ இடத்தில் பொதுமக்கள்,பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளளோ பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகைதரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்பதாகவும்,தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறான பின்னனியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குறித்த வைத்தியசாலையில் இராணுவமும் பொலிசாரும் சூழ்ந்து எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என தெரியவருகின்றது.
Monday, November 18, 2024
அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம்!! நடக்கப் போவது என்ன?
பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இந்த வார இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வரையிலான பதவி நிலைகளை வகிக்கும் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள அதிகாரிகள் தொடர்பிலான பட்டியல் பொதுப்பாதுகாப்பு அமைச்சினால் தேசிய பொலிஸ் ஆணைக்கழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் கடமையாற்றிய அதிகாரிகள், வினைத்திறன் இன்றி செயற்படும் அதிகாரிகள் ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பதவியிலும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயர் அதிகாரிகளுக்கான இடமாற்றத்தின் பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.
2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Classes Seminars A L Exams Banned From Tomorrow
2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
மேலும், இந்த விதிமுறைக்கு இணங்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 2,312 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு | Govt To Recover All The Looted Wealth From People
நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் மீட்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அமச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலையில் பொருட்கள்
மேலும், மக்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கும் மாபியாக்களுக்கு இனிமேல் அவர்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போகும் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடு இன்றி பொருட்களையும் வாங்கக்கூடிய சந்தை உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மனைவியை நண்பனுடன் உறவு கொள்ள வைத்து பார்த்திருந்த கணவன்!! வெல்லவாயாவில் சம்பவம்!!
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெஹெரகல பகுதியில் தனது 42 வயதுடைய மனைவியை மது போதையில் இருந்த நண்பனுக்கு விருந்தாக்கிய கணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில், இரு மூத்த குழந்தைகளும் வேறு பகுதிகளில் பணிபுரிகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி பெண்ணின் கணவர், அவரது நண்பரான சமிந்தவின் செங்கல் பட்டறைக்கு சென்று மாலை 4 மணியளவில் அவரது முச்சக்கர வண்டியிலேயே வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து இருவரும் மது அருந்தி விட்டு இரவு மீண்டும் வெளியே சென்றுள்ளனர்.
பெண் தனது 12 வயதுடைய சிறுவனுடன் அறைக்குச் சென்று கணவர் வரும் வரை தூங்கிக்கொண்டிருந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் கணவர் , சமிந்த என்பவருடன் மீண்டும் மது அருந்திவிட்டு வந்து குறித்த பெண்ணை வேறு அறைக்கு இழுத்துச் சென்று நண்பர் மனைவியை துஸ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபரான 40 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவான கணவனை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Sunday, November 17, 2024
கொழும்பில் ஆவா குழு காவாலிகள் 4 பேர் கைது!! 2 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாம்!!
மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை,
ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.
டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது.
மேற்படி ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு ‘Tik Tok’செயலி மூலம் மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் பெண் ஒருவர் ஊடாக மட்டக்குளிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து தாக்கி வீடியோ எடுத்து டுபாயில் உள்ள ஒருவரிடம் காண்பித்துள்ளமை அவர்களின் தொலைபேசியை சோதனையிட்டதில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கொமாண்டோ பயிற்சியில் ஈடுபட்ட 500 இராணுவ்வீர்ர்களுக்கு ஏற்பட்ட பயங்கரம்!!
மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.
இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
இதை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார்.
இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தமிரசுகட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எதிராக சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமறுத்த சுமந்திரன்!
தமிரசுகட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எதிராக சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமறுத்த சுமந்திரன்!
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்கமுற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்கமறுத்தார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்கமுற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டுச்சென்றார்.
குறித்த குற்றப்பத்திரிகையில்.. கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரனாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றிதேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்…
தோற்றவர்கள் பாராளுமன்றதேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது.
முஸ்லீம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரதுகருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது. அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்ப்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை.
தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் குடுப்பதற்கு இனி இங்குபோராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கோ என்று எங்கட ஆக்கள் சொல்லி சிலநேரம் குடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும்.
தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job