வவுனியாவைச் சொந்த இடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் Seine-Saint-Denis பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 37 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 2 சிறு பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு அதே பகுதியில் வசித்து வந்த துர்க் இனத்தைச் சேர்ந்த காவாலி ஒருவனுடன் குடும்பம நடாத்தி வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக கணவன் எமது ஊடகத்தரப்பினரை தொடர்பு கொண்டு சில விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த தனது மனைவியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் பல்லாயிரம் யூரோ செலவு செய்து தான் 2010 ஆண்டு இலங்கைக்கு சென்று திருமணம் முடித்து 2011ம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவளை பிரான்சிற்கு அழைத்துவிட்டேன். சந்தோசமாக குடும்பம் நடாத்தி தற்போது 11 வயது மற்றும் 7 வயதில் இரு பெண்பிள்ளைகளும் இருக்கும் போது தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து துர்க் இனத்தைச் சேர்ந்த ஒரு காவாலியுடன் குடும்பம் நடாத்தி வருவதாகவும் அவன் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்பதுடன் சோசல் உதவியுடன் வாழ்பவன் எனவும் கணவன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மனைவி திருந்தி வரும் பட்சத்தில் அவளை தான் மீண்டும் ஏற்றுக் கொள்வேன் என குரல் தடுமாறத் தடுமாற எமக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மூத்த மகள் இன்னும் ஒரிரு மாதங்களில் பருவ வயதை அடைந்துவிடுவாள் என்பதால் மனைவி தயவு செய்து மகள்களின் நலன்களுக்காவது தன்னுடன் வந்து சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதே நேரம் தன்னை முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லைப்படுத்தி அச்சுறுத்துவதாக துர்க் இன காவாலியுடன் குடும்பம் நடாத்தும் மனைவி பொலிசாருக்கு முறையிட்டதன் பிரகாரம் தற்போத கணவனு்ககு கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மனைவியின் தொலைபேசி இலக்கம் எமக்கு கணவனால் தரப்பட்டது. மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து கதைக்க முற்பட்ட போது மனைவி தொலைபேசி இணைப்பை துண்டித்தார். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் கலாச்சாரம் மிகக்கேவலமான முறையில் சீரழிந்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.
மனைவி மற்றும் குறித்த துர்க் காவாலி உட்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் பல வீடியோக்கள் எம்மிடம் உள்ளது. இருப்பினும் கணவனின் வேண்டுகோளின் படி நாம் அவற்றை பிரசுரிக்கவில்லை.






0 comments:
Post a Comment