கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ் தீவப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவருமான 62 வயது கதிாகாமதம்பி குகநேசன் தாய்லாந் பொலிசாரால் Khao Yai National Park காட்டுப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டள்ளார். தனது மனைவியை குறித்த விடுதியில் வைத்து கடுமையான சித்தரவதை புரிந்தமை மற்றும் மனைவியின் அந்தரங்க உறுப்பினை ஊசி நுாலால் தைத்து சித்தரவதை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.தற்போது குகநேசன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது குகநேசனின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கனடாவில் உள்ள குகநேசனின் பிள்ளைகளுக்கு பொலிசார் மற்றும் குகநேசனின் மனைவி தெரியப்படுத்தியதை அடுத்து குகநேசனின் மூத்த மகன் தாய்லாந் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
தாய்லாந்தில் காணப்படும் kratom என்ற இயற்கையான போதை மருந்து ஒன்றை பாவித்த பின்னரே குகநேசன் மனைவியை கட்டி வைத்து சித்திரவதை புரிந்துள்ளார் என மனைவி பொலிசாருக்கும் தனது பிள்ளைகளுக்கும் தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருளை அவர் வாங்கி வந்து தீமையற்ற ஆரோக்கியமான இயற்கை மூலிகை என கூறி தனக்கு தெரிவித்து அவர் பாவித்ததாகவும் அதை பாவித்து சிறிது நேரத்தின் பின் குகநேசன் தன்னுடன் உறவு கொண்டு பின்னர் தன்னை கட்டி வைத்து வாய்க்குள் உள்ளாடைகள் அடைந்த பின் சித்தரவதை செய்ததாகவும் பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.இதே வேளை தாய்லாந் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குகநேசன் மனைவி மீது தற்செயலாக சித்திரவதை செய்யவில்லை என்றும் திட்டமிட்ட ரீதியிலேயே சித்தரவதை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள். போதை மருந்து பாவிக்கும் முன்னரே குகநேசன் செருப்பு தைக்கும் ஊசி மற்றும் பிளாஸ்டிக் நுால் ஆகியவற்றை கொள்முதல் செய்துள்ளார். இது மனைவிக்கு தெரியாது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த kratom என்ற போதைப்பொருள் வீரியம் கூடிய போதைப்பொருள் அல்ல எனவும் பொலிசார் நீதிமன்றில் கூறியுள்ளார்கள்.
இதே வேளை கனடாவில் உள்ள தனது மகன் வயதான இளைஞனையும் தன்னையும் தொடர்புபடுத்தி தன்னை கட்டி வைத்து குகநேசன் சுயநினைவற்ற நிலையில் சித்திரவதை புரிந்ததாக மனைவி தனது பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குகநேசனும் மனைவியும் அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் என்பதுடன் எந்தவித சண்டை சச்சரவுகளும் இன்றி வாழ்ந்து வந்தவர்கள் என குகநேசனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த வருடம் குகநேசன் தம்பதிகள் இந்தியா முழுவதும் சுற்றுலா சென்று வந்தவர்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.






0 comments:
Post a Comment