மன்னாரில் கணவனுடன் வைத்தியசாலை சென்ற 21 வயது சகாயகீர்த்தனா கணவனைக் கைவிட்டு யாருடன் ஓடினார்!! பொலிசார் தீவிர தேடுதல்!!
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த அ. கான்சியூஸ் சகாயகீர்த்தனா வயது (21) எனும் திருமணமான பெண்ணை அவரது கணவர் நேற்றைய தினம் ( 10-1-2025) மன்னார் பொது மருத்துவமனைக்கு பற்சிக்ச்சைக்காக அழைத்துச் சென்று பின்னார் அங்கிருந்து கணவர் வீடு திரும்பி மீண்டும் மனைவியை அழைத்துவர சென்ற போது அந்த பெண் அங்கு இல்லை
இது தொடாபாக மருத்துவமனையிலும் விசாரணை செய்து மன்னார் நகரம் முழுவது தேடியும் பெண் தொடர்பான தகவல் இல்லை என்பதால் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் மன்னார் வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வவுனியா செல்லும் பேருந்தில் சென்று வவுனியா குழு மாட்டுச் சந்தியில் இறங்கி வேறு ஒரு முச்சக்கர வண்டியில் சென்றதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தார்கள்
இன்றைய தினமும் வவுனியா குழு மாட்டுச் சந்தி உட்பட பல இடங்களிலும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த போதும் பெண் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை காணாமல் போன இந்த இந்த பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அவர்களது 0763302475 இந்த தொலைபேசிக்கும் அழைத்து தெரியப்படுத்துமாறு பெண்ணின் உறவினர்கள் கவலையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.






0 comments:
Post a Comment