சுவிஸ்லாந்தில் கள்ளத் தொடர்பு என சந்தேகபட்ட கணவன் வாலி படப் பாணியில் தமிழ் குடும்பப் பெண்ணை கொன்றது எப்படி? நடிப்புக்கு ஒஸ்கார் விருது கொடுக்கலாம் என நீதிபதி கூறியது ஏன்?
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திட்டமிட்ட வகையில் மனைவியை கொ*லையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத் தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குற்றவாளிகள் இணைந்து கொலை செய்த நிலையில், இயற்கையான மரணம் என நாடகமாடியதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து அவர் மீது பாய்ந்துள்ளனர்.
கணவனினின் சகோதரன் பெண்ணின் கால்களை அழுத்திப் பிடித்திருக்க பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி, சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து அவரைக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், அவர் தூக்கத்திலேயே இயற்கையாக இறந்தது போல் காட்டுவதற்காக உடலை சரி செய்து கட்டிலில் நகர்த்தி வைத்துள்ளனர். அதன் பின்னர் கணவன் ஒன்றும் நடவாதது போல் பாடசாலை சென்ற தனது மகளை அழைத்து வந்துள்ளார். மகள் வீட்டினுள் வந்தவுடன் ”அம்மா உள்ளே படுத்திருக்கின்றார்… போய் எழுப்பி சாப்பாட்டை கேட்டு உண்” என கூறியுள்ளார். உள்ளே சென்ற மகள் தாயை தட்டி எழுப்பிய போது தாய் பேச்சு மூச்சு அற்று கிடக்கவே தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார் மகள். அதன் பின்னர் ஏதும் அறியாதவர் போல் அங்கு சென்ற தந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னரே விசாரணைகள் ஆரம்பமாகி உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கணவனின் திட்டமிட்ட இந்தச் செயற்பாட்டை ஒஸ்கார் விருதுக்கு தகுதியானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கள்ளக்காதல் என்ற சிறிய விடயத்திற்காக ஒருவரைக் கொலை செய்துள்ளதாக நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment