உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால்...இந்தப் பதிவை கவனமாகப் படியுங்கள்.
உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறி , உங்கள் விவரங்களை உள்ளிடும்படி கேட்டு மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி (ஈமெயில் , வாட்சப்ப் , பேஸ்புக் , டெலிகிராம் ) ஊடக வரலாம் . அந்த செய்தியில் ஒரு இணைப்பு (Link ) சேர்க்கப்பட்டிருக்கும் . அந்த லிங்க் ஐ கிளிக் செய்து இணைப்பின் ஊடாக செல்லும்போது இலங்கை தபால் சேவையின் இணையதளத்தை ஒத்த இணையத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
👉ஆனால் அது உண்மையான இலங்கை தபால் சேவை இணையத்தளம் அல்ல. அஞ்சல் இணையதளம் போல் தோற்றமளிக்க உருவாக்கப்பட்ட போலி இணையதளம்.
👉 அந்த போலி மெயில் இணையதளத்திற்கு சென்றதும், அது உங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிடும் படி கேட்கும் .
👉 இவ்வாறான விபரங்களை வழங்கிய பின்னர் 99/= ரூபா கட்டணம் ஒன்றை செலுத்துமாறு கேட்கும் .
👉 அந்த 99/= ரூபாயை செலுத்த உங்கள் வங்கி அட்டையை உள்ளிட சொல்லும் .
👉 உங்கள் வங்கி அட்டையை உள்ளிட்ட பிறகு உங்கள் வங்கி கணக்கு மிகுதி பூச்சியமாக மாறி உங்கள் பணம் பறிபோனதை அவதானிப்பீர்கள் .
👉 இதை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தவும் . ஏமாறாதீர்கள் குறிப்பாக ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக இருக்கவும் . Verfied செய்யப்பட்ட இணையதளங்களில் மாத்திரம் உங்கள் வங்கி அட்டை இலக்கங்களை உள்ளிடுங்கள் அவதானமாக இருங்கள்.
சமூக வலைத்தளங்களில் வந்த செய்தி ஒன்று , அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறோம் .
0 comments:
Post a Comment