நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 14, 2023

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம் | Kilinochchi Student Missing Get New Information


 கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம்

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 18 வயதான புவனேஸ்வரன் - ஆர்த்தி என்ற மாணவி காணாமற் போயுள்ளதாக பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்திருந்தனர்.அத்துட்ன அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.

காணாமற்போன மாணவி

இந்த நிலையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி பிரத்தியேக வகுப்பிற்கு சென்று அது நடத்தப்படாத நிலையில் அங்கிருந்து வெளியேறிய மாணவி நண்பகல் 12.15 மணியளவில் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார்.

மாணவியின் சிம் அட்டை

தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயை அழவேண்டாம் எனவும் தங்கையை நன்றாக பாரத்துக் கொள்ளுமாறும் தான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவி அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி இலக்கத்தின் சிம் அட்டை குறித்த மாணவியான தமது மகளின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment