வவுனியாவில் கந்தபுரத்தை வசிப்பிடமாக கொண்ட சர்வகுலேந்திரன் என்ற நபரை கடந்த மாதம் ( 09.06.2023 ) தனி நபர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இரண்டு கிழமை சிறையில் அடைக்கப்பட்டார் . அதன் பின்னர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்காட்டார்.
இரண்டு தவணைகளுக்கு நீதிமன்றத்துக்கு வருகை தராததால் ம் இவருக்கு ( சர்வகுலேந்திரன் ) பிணைக்கு ஒப்பமிட்ட இவரது மகனை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று இரவு ( 04.09.2023 ) கைது செய்து ( 05.09.2023 ) நீதிமன்றத்துக்கு முன்னிலையில் கொண்டு சென்றனர். இந்த வழக்கில் இரண்டு நபர் சரீர பிணையில் சர்வகுலேந்திரனின் மகன் விடுவிக்கப்பட்டார்.
இந்த மாதம் 18.09.2023 ஆம் திகதி வழக்கிற்கு சர்வகுலேந்திரன் மூன்று மாதம் செலுத்த வேண்டிய மொத்த பணம் 9 இலட்சம் ரூபா பணத்தினை கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் சர்வகுலேந்திரனின் பிணையாளர்கள் மூவரும் மற்றும் சர்வகுலேந்திரனின் மகனின் பிணையாளர்கள் இருவரும் மொத்தமாக 5 பிணையாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
அதுமட்டுமில்லாமல் கனடாவுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பல இலட்சம் ரூபா காசுகளை பெற்று பல போலியான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றிய ரவிசங்கர் , சிபான் மற்றும் சுஜீதரன் ஆகியோரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த புகைப்படத்திலுள்ள நபரால் ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் தெரிவித்துள்ளார்கள் .
0 comments:
Post a Comment