கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம் நடந்தேறியுள்ளது... ""அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது""
இன்று மாலை 4.00மணிக்கு ஆரம்பமான தேரோட்டநிகழ்வில் பிள்ளையார் தேரும் எம்பெருமான் சித்திரத்தேரும் வீதிவலம்வருவது வழமை . இத்தேர்தல்களில் வடம்பொருத்தி வடத்தின் ஊடாக பக்தர்கள் தேரினை இழுத்துச்செல்வார்கள்.
ஆனால் இவ்வாண்டு வீதிவலம் வந்த பிள்ளையார் தேர் இடைநடுவில் நின்றதுடன் சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஐந்து தடவைகன் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளது. அதன்பின் வரலாற்றில் முதல்தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதிவலம் வந்துள்ளது...
இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்...
1920களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும், 1933இல் உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும் மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இன்று நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பீதியினை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிந்தது அதன் பின்னர் அந்தனர் தலைமேல் கூப்பி கையேந்தி மன்டாடி இறைவனை தொழ ; பக்தர்கள் கண்மலர் கண்ணீர் சொரிய அரோகரா கோசம் வான் முழங்க அடுத்த கணமே வானில் இருந்து நெருப்பு தோற்றம் சூரிய கதிர்களாக தோன்றி இராஜகோபுரம் முதல் சித்திரை தேர் முதல் பட்டதன் பின்னர் தேர் ஐந்து வடங்கள் பூட்டிய பின்னர் எம்பெருமான் சித்திரை தேர் அசைந்து வலம் வந்தது அவன் அருள் இன்றி ஓர் அணுவும் அசையாது.... எது எவ்வாறோ ஏதோவொரு தெய்வக்குற்றம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்... "" கலியுகத்தில் இது என்ன விளையாட்டு எங்கள் ஈசனே சிவகாமி நேசனே எமை ஈண்ட கொக்கட்டிச்சோலை ஈசனே...
0 comments:
Post a Comment