கொழும்புக்கு எக்ஸ்சாம் எழுதப் போவதாக கூறி காதலனை ஏமாற்றி சுவிஸ் குடும்பஸ்தருடன் பறந்த பல்கலைக்கழக காதலி!! கிளிநொச்சியில் சம்பவம்!!
கிளிநொச்சியைச் சேர்ந்த 25 வயது யுவதி ஒருவர் காதலனை ஏமாற்றி சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்பஸ்தருடன் தொடர்பட்டு சுவிஸ்லாந் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 40 வயதான குறித்த சுவிஸ் குடும்பஸ்தர் சுவிஸ்லாந்தில் மனைவியை விவாகரத்து செய்த பின் கடந்த வருட தொடக்கத்திலிருந்து வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சியில் சில மாதங்கள் தங்கியிருந்த பின் மீண்டும் சுவிஸ் சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவரை யாரும் அறியாத வண்ணம் பதிவுத் திருமணம் முடித்துள்ளார். ஆனால் அந்தப் பதிவுத்திருமணம் யுவதியின் பெற்றோருக்கு தெரியும் என காதலன் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த யுவதி வவுனியா பல்கலைக்கழகத்தில் கற்று வந்ததுடன் அங்கு கல்வி கற்றுவந்த விசுவமடுப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை காதலித்தும் வந்துள்ளார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், காதலனின் சகோதரியின் திருமணம் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என காதலியின் பெற்றோரால் கூறப்பட்டு வந்ததாம். இந் நிலையிலேயே குறித்த யுவதி தனது காதலனுக்கும் தெரியாமல் சுவிஸ்லாந்துக்கு சென்றுள்ளதாக காதலன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புக்கு தனியார் வங்கி ஒன்றின் எக்ஸ்சாம் ஒன்று எழுதுப் போவதாகவும் 5 நாட்கள் அதற்காக கொழும்பில் தங்கியிருக்கப் போவதாகவும் தனது தாயாருடன் கொழும்பு சென்று அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து எக்சாம் எழுதிவிட்டு வரப் போவதாகவும் காதலனுக்கு தெரிவித்து காதலனை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந் சென்றுள்ளார் குறித்த யுவதி. காதலன் அனுப்பிய யுவதியின் பெற்றோரின் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்த போது அவர்கள் வேறு ஒருகதையைக் கூறினார்கள்.
தனது மகளைக் காதலித்து வந்த குறித்த மாணவன் மூத்த சகோதரி திருமணம் செய்யாது இருப்பதாக கூறி தனது மகளை திருமணம் செய்ய பின்னடித்து வந்ததுடன் அவனது தாயும் தாயாரின் தம்பியாருமாகச் சேர்ந்து தமது வீட்டுக்கு வந்து சகோதரியின் திருமணத்திற்காக 35 லட்சம் ரூபா சீதனம் கேட்டதாகவும் அதன் பின்னரே தனது மகள் காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்கள்.
இது தொடர்பாக காதலனிடம் கேட்ட போது, “தான் தனது சகோதரியின் திருமண விடயத்தை கூறிய போது காதலியின் பெற்றோரே உமது அக்காவின் திருமணம் நடைபெற்ற பின் மகளைத் திருமணம் செய்யுங்கள் என்று கூறியதுடன் நிரந்தரமான வேலை ஒன்று கிடைத்த பின்னர் திருமணத்தை செய்வது நல்லது என கூறி பின்னடித்து வந்ததாகவும் அவர்கள் கூறுவது சரி என நினைத்து தான் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும் தனது தாயாரும் மாமாவும் சென்று கதைத்த விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.அத்துடன் அது தொடர்பாக காதலியோ அவளது பெற்றோரோ தனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் காதலன் கூறினார்.
இவ்வாறான நிலையில் காதலனால் அனுப்பப்பட்ட காதலி மற்றும் சுவிஸ் குடும்பஸ்தரின் புகைப்படங்களை நாம் இங்கு பிரசுரிக்கவில்லை.






0 comments:
Post a Comment