Friday, September 1, 2023
எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்..!!!
எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்..!!!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறைந்த விலையில் எரிபொருள் - சினோபெக்கின் அதிரடி அறிவிப்பு..! விலை விபரங்கள் உள்ளே...
சீனா பெட்ரோலிய நிறுவனமான சினோபெக் நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் (LIOC) அறிவித்துள்ள விலைகளை விட குறைவாகும்.
நேற்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் CPC மற்றும் LIOC ஆகியவை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில்,சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து அதன் சில்லறை எரிபொருள் விலையை அறிவித்துள்ளது.
குறைந்த விலையில் எரிபொருள் - சினோபெக்கின் அதிரடி அறிவிப்பு..! விலை விபரங்கள் உள்ளே... | Sinopec Company Fuel Prices
அதன்படி, சீன எண்ணெய் நிறுவனங்களின் எரிபொருள் விலை முறையே...
92 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 358/-
95 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 414/-
ஒட்டோ டீசல் - ரூ. 338/-
சூப்பர் டீசல் - ரூ. 356/-
CPC மற்றும் LIOC விலை விபரங்கள்
இந்த நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் (LIOC) நிறுவனங்களின் எரிபொருட்களின் விலைகள் நேற்று இரவு நடைமுறைக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்படியிலான விலை விபரங்கள்
92 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 361/-
95 ஒக்டேன் பெட்ரோல் - ரூ. 417/-
ஒட்டோ டீசல் - ரூ. 341/-
சூப்பர் டீசல் - ரூ. 359/-
Thursday, August 31, 2023
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் | Kokkuthuduai Human Burial Case Threat To Lawyers
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது
விபரங்களை சேகரித்த புலனாய்வுப்பிரிவினர்
குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கிராம அலுவலரிடமும்
குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்
நீதிமன்றின் கவனத்திற்கு
இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன், புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்
நீதிபதி உத்தரவு
இது தொடர்பாக கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருப்பதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குளாய் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
விலை விபரங்கள்
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு | Srilanka Fule Price Increase
இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 341 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 231 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
யாழில் முன்னாள் காதலன் சப்ரைஸ் கிப் கொடுக்கவில்லையாம்!! லண்டன் மாப்பிளையும் பொம்பிளையும் மணவறையில் கும்மாம் குத்து!!
யாழில் முன்னாள் காதலன் சப்ரைஸ் கிப் கொடுக்கவில்லையாம்!! லண்டன் மாப்பிளையும் பொம்பிளையும் மணவறையில் கும்மாம் குத்து!!
யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பகுதிகளில் கலியாண வீடுகள் தற்போது விதம் விதமாக கொண்டாடப்படுகின்றன….
இனி வரும் காலம் உற்றார் உறவினர்கள் விளக்குப் பிடிக்க நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் என்ற கமலின் பாட்டை படித்தபடி முதலிரவு கொண்டாடுவதையும் வீடியோ பிடித்து ரிக்ரொக்கில் போடத் தொடங்குவார்கள். யாழில் உள்ள கலியாணமண்டபம் ஒன்றில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த கலியாண வீட்டு கருமாந்திரத்தைத் தான் தற்போது உங்களுக்கு தருகின்றோம்…..
குறித்த மாப்பிளைக்கு யுவதியின் முன்னாள் காதலன் அணில் கொந்திய மாம்பழ சப்ரைஸ் கிப்ட் கொடுக்காத காரணத்தால் மாப்பிளை அடங்காத ஆனந்தத்துடன் ஆடுவதும் யுவதியும் தானும் அதற்கு ஏற்றது போல் நடிப்பதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்த வைத்துள்ளது…
பொம்பிளைக்கு 32 வயதும் மாப்பிளைக்கு 37 வயதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்! அறிவிக்கப்பட்ட விலைக் கழிவு | Fuel Price Discount In Sri Lanka
இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்! அறிவிக்கப்பட்ட விலைக் கழிவு!
Fuel Price In Sri Lanka
இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம், கொழும்பு - மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
விலைக் கழிவு
அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு 3 தலா ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
மே மாதத்தின் பிற்பகுதியில், இலங்கை அரச பிரதிநிதிகள் மற்றும் சினோபெக் பிரதிநிதிகளுக்கு இடையில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் 5 ஆம் திகதி (05.09.2023) அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்றையதினம்(31) விசேட வழக்கு இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அனைத்து திணைக்களங்களின் சம்மதத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம் | Kokkuthoduvai Human Burial Ground Court Order
குறித்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், வி.கே.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, வி.எஸ்.தனஞ்சயன், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினுடைய சட்டத்தரணிகளான எஸ். துஷ்யந்தினி, ஜெ.தர்பரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய காவல்துறை மா அதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி காவல்துறை அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் பலரும் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்புக்களுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
Wednesday, August 30, 2023
யாழில் பல்கலை மாணவி தற்கொலை முயற்சி!!காதலனின் பெற்றோர் சாதி பார்த்தனராம்!! பொலிஸ் அதிகாரியும் உடந்தை?
யாழ் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட போது காப்பாற்றப்பட்டுள்ளார். வீட்டின் பின் புறத்தில் இருந்த மாமரம் ஒன்றில் கதிரை வைத்து கயிற்றை கட்டி தொங்கிய போது அதனைப் பார்த்த அயல் வீட்டவர்கள் விரைந்து செயற்பட்டு யுவதியைக் காப்பாற்றிள்ளனர்.
யாழ் நகர்ப்பகுதிக்கு அண்மையில் செயற்படும் வாகன சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரின் மகளான குறித்த யுவதி கண்டிப் பகுதியைச் சேர்ந்த அதே பீடத்தில் கற்கும் சிங்கள மாணவனைக் காதலித்துள்ளார். அந்த மாணவனுடன் சேர்ந்து சமூகவலைத்தளங்களிலும் ஜோடியாக புகைப்படங்களையும் பதிவு செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 20ம் திகதி யுவதி காதலித்து வந்த சிங்கள மாணவனின் பெற்றோர் யுவதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்கள். இருவரது திருமண விடயம் தொடர்பாக கதைக்கவே அவர்கள் வந்ததாகத் தெரியவருகின்றது. மாணவி வசதியான குடும்பப் பின்னணியைச் சேர்ந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவனின் பெற்றோருடன் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் ஒருவரும் சிநேகிதபூர்வமாக மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். இவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பின்னர் மாணவியுடனான தொடர்பை மாணவன் முறித்துவிட்டார். அத்துடன் மாணவனது கட்டுப்பாட்டில் இருந்த மாணவியின் சமூகவலைத்தளங்களும் குறித்த மாணவனால் முடக்கப்பட்டுள்ளது.
மாணவியின் காதலன் தொடர்பை துண்டித்த காரணத்தை மாணவி மற்றும் பெற்றோர், உறவுகள் அறிய முற்பட்ட போதே சாதிப் பாகுபாடு காரணமாக மாணவனின் பெற்றோர் யுவதியுடனான திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த விடயம் தெரியவந்துளளது. இதன் பின்னணியிலேயே மாணவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
மாணவனின் பெற்றோருடன் யுவதியின் வீட்டுக்கு வந்த குறித்த பொலிஸ் புலனாய்வு அதிகாரி மாணவியின் தந்தையின் வேலை மற்றும் வேலை செய்யும் இடம் மற்றும் பல்வேறு அடிப்படை தகவல்களை அவர்களிடம் கதையோடு கதையாக கேட்டு அறிந்துள்ளாராம். அவரே குறித்த மாணவியின் காதல் முறிவுக்கு பிரதான காரணமாக இருக்கலாம் என யுவதியின் உறவுகள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் புதிய தகவல்
Ministry of Education Education
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும், திருத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைகளில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு
ministry of education
உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
பல தடைகளுக்கு மத்தியில் பரீட்சை பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி! சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்
மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி! சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்
முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கி பரிசு
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) முன்னாள் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், தனது திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரியாசுல் ஹக்கியின் மனைவி சபீனா யாஸ்மின் இந்த துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் விமர்சனம் காரணமாக இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து ரியாசுல் நீக்கியுள்ளார்.
பாஜக மற்றும் CPM தலைவர்கள் கேள்வி
இந்த வீடியோ மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சிபிஎம் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் அமைதியும், பாதுகாப்பும் மோசமாகிவிட்டதாக மம்தா அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.
ராணுவம் மற்றும் துணை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட AK 47 துப்பாக்கி, முன்னாள் TMC தலைவரின் கைகளுக்கு எப்படி வந்தது என்பதை அறிய பாஜக மற்றும் CPM தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் ரியாசுல் என்ன மாதிரியான சமிக்ஞையை தெரிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
பொம்மை துப்பாக்கி
ஆனால் ரியாசுல், திருமண பரிசாக மனைவிக்கு 'பொம்மை துப்பாக்கி' மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது உண்மையான துப்பாக்கி இல்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வீடியோவில் வெறும் பொம்மை துப்பாக்கியுடன் காணப்பட்டதால், இந்த விஷயத்தில் தனது மனைவி மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி ரியாசுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.




















