Sunday, August 13, 2023

ரகசிய தொடர்பு? பாலி ல் சேட்டை!! கிணற்றுக்குள் தலைகீழாக கட்டி சித்திரவதை!! யாழில் மகேந்திரன் அடித்துக் கொல்லப்பட்ட பின்னணி என்ன? 6 பேர் கைது!!


யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்றுமுன்தினம் (12) நிர்வாண நிலையில் 52 வயதான மகேந்திரன் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகேந்திரனின் சொந்த இடம் கொடிகாமமாகும். மகேந்திரன் கல்வியங்காடு கோப்பாய் தெற்கில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் விஷேட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி (9 – வயது) ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்திருந்தார். சிறுமியின் தாயாருடன் மகேந்திரனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் சிறுமி து ஸ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த தகவலை சிறுமியின் தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மகேந்திரனை கிணற்றுக்குள் தலைகீழாகக் கட்டி வைத்திருந்து கொடூரமாகத் தாக்கி அதனை தொலைபேசிகளில் வீடியோக்களாகவும் எடுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

பின் அந்த நபரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர். அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரியக் கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும் குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருதய நோய்க்கு பாவிக்கும் மருந்துகள் சில பாலி யல் துாண்டல்களை அதிகரிக்க செய்வதாகவும் குறித்த மருந்துகளை சிலர் பாலி யல்துாண்டல்களுக்காக பாவிப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பந்தப்பட்ட சிறுமி இன்று சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (14) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job