வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய மஞ்சள் காமாலை தடுப்பூசி தற்போது நாட்டில் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சுகாதார விதிகளுக்கமைய, இந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தடுப்பூசியைப் பெற வேண்டும். ஆனால் நாட்டில் தடுப்பூசி இல்லாததால், மஞ்சள் காமாலை பரவும் நாடுகளுக்குச் செல்வதன் மூலம் நோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, மஞ்சள் காமாலையை தடுப்பது இன்றியமையாத பொறுப்பாகும், மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த, eliminating yellow fever epidemic eye 2026 எனப்படும் சர்வதேச திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மஞ்சள் காமாலை
உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் அந்த திட்டத்திற்கமைய செயல்பட வேண்டும்.
பல துறைகளில் பலவீனங்கள் காணப்படுவதனால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் அவப்பெயர் ஏற்படலாம் எனவும் நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment