This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, January 31, 2025

வடக்கில் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை!! பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோரிக்கை!! அரச முக்கியஸ்தர் பரபரப்பு தகவல்!!


வடக்கில் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை!! பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோரிக்கை!! அரச முக்கியஸ்தர் பரபரப்பு தகவல்!!

கிளிநொச்சி இராமநாதபுரம் , வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிசாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க , தான் இராமநாதபுரம் , ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்கு சென்ற சமயம் அப்பகுதி மக்கள் பொலிசாரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால் ,பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி  நிலையில் உள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் , உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன என தெரிவிக்கின்றனர்.

தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ,எதற்காக பொலிஸ் நிலையம் , அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என மேலும் தெரிவித்தார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில் , கீழ்நிலை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால் , மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும். என தெரிவித்தார்.

அதன் போது ஜனாதிபதி , வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த தகவல் வழங்கியவர் தொடர்பில் , சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கூறினார்.

அருச்சுனாவின் தங்கத்தின் மீது கண் வைத்த அனுராதபுரம் பொலிசார்!! இன்று தங்கம் விசாரணையில்!! நடந்தது என்ன?


அருச்சுனாவின் தங்கத்தின் மீது கண் வைத்த அனுராதபுரம் பொலிசார்!! இன்று தங்கம் விசாரணையில்!! நடந்தது என்ன?

அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிசாருடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சுனாவுடன் சேர்ந்திருக்கும் பெண் இன்று (31) வாக்குமூலம் வழங்க அனுராதபுரம் பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுனந்த தென்னக்கோன் ஊடகங்களிடம் கூறியதாவது:

அனுராதபுரம் தலைமையக காவல்துறையின் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது, ​​முந்தைய நாள் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கைக்கு காவல்துறை கூடுதல் விளக்கங்களை வழங்கியது. வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். மேலும் விசாரணைகள் நடத்தப்படுகிறதா என்று நீதவான், பொலிசாரிடம் கேட்டார். அப்போது தகவல் அளித்த காவல்துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணின் தகவலைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

அந்த நேரத்தில், காவல்துறை எங்கள் கட்சிக்காரரை வந்து வாக்குமூலம் அளிக்கச் சொல்லவே இல்லை என்று கூறினோம். அதன்படி, அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்ட நீதவான், தலா இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் எம்.பி.யை விடுவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பெண் நாளை (இன்று) அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று வாக்குமூலம் அளிக்க உள்ளார். எனது கட்சிக்காரர் ஆரம்பத்திலிருந்தே இந்த விசாரணைகளில் காவல்துறைக்கு ஆதரவளித்தார். ஆனால் போலீசார் உதவி வழங்கவில்லை என்று கூறுகிறார்கள்.

போக்குவரத்து சம்பவம் தொடர்பான உண்மைகளை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்த மறுநாளே, ஒரு நல்ல குடிமகனாக இந்த நாட்டின் சட்டத்தை மதித்து, எம்.பி. அர்ச்சுனா, ஒரு மனுவுடன் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.” என்றார்.

Wednesday, January 29, 2025

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மரணம் | Tamil Arasu Party Leader Mavai Senathiraja Passes


தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்

யாழ் போதானா வைத்தியசாலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்.

மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) இரவு 10. மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டில் வழுக்கி விழுததை அடுத்து நேற்று காலை (28) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் அவர் சற்று நேரத்துக்கு முன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியகட்சிகள் மாவை சேனாதிராஜாவை காண மருத்துவமனைக்கு படையெடுத்ததாக கூறப்படுகின்றது.

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!!


அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!!

நேற்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார்.கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் அனுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணைகளைத் தொடங்கி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Saturday, January 25, 2025

முல்லைத்தீவில் நாயைத் துாக்கில் போடுமாறு தீர்ப்பு வழங்கிய இணக்கசபை முட்டாள்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!


முல்லைத்தீவில் நாயைத் துாக்கில் போடுமாறு தீர்ப்பு வழங்கிய இணக்கசபை முட்டாள்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!

ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,,,,

சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார், இது இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,,,

இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு)

சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு)

தபால் உத்தியொகத்தர் மனைவி, கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவரும் வழங்கிய தீர்ப்பு விசித்திரமாக உள்ளது,,,

அதாவது குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளனர்,,,

என்ன கொடுமையான தண்டனை பாருங்கள்,,,,

ஐந்தறிவு உயிரை எப்படி கொன்றுள்ளனர்,,,,

கண் சத்திரசிகிச்சைக்கு கடப்பாறையா தீர்வு?????

இந்த அடிமுட்டாள்களை யார் இணக்கசபைக்கு நீதிவழங்க அனுமதித்தது???

சிறுமியை துஸ்பி ரயோகம் செய்து சிறையிலிருந்து தப்பி ஓடியவன் நிறை வெறியில்


சிறுமியை துஸ்பி ரயோகம் செய்து சிறையிலிருந்து தப்பி ஓடியவன் நிறை வெறியில் கைது!!

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் ஒரு சிறுமி ஒருவரை பாலி யல் வன்கொ டுமை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில், அனுராதபுரம்-பாதெனிய பிரதான வீதியில் உள்ள கோன்வெவ பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக சந்தேக நபர், மோட்டார் சைக்கிளுடன், தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், அஸ்வெத்தும பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று (24) அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சந்தேக நபர் சிறுமி ஒருவரை பா லியல் வன்கொ டுமை செய்ததற்காக குருநாகல் பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்டு, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும்,
அவருக்கு ஏற்பட்ட  நோய் நிலைமை காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​சிறை அதிகாரிகளிடமிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளமையும், சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Friday, January 24, 2025

வலிப்பு வந்து யுவதி மரணம்!! ஆசுப்பத்திரியில் நடந்தது என்ன? தாயார் கதறல்!!


வலிப்பு வந்து யுவதி மரணம்!! ஆசுப்பத்திரியில் நடந்தது என்ன? தாயார் கதறல்!!

பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த யுவதி கடந்த 17 ஆம் திகதி வலிப்பு நோய் காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாலும், உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படாததாலும், தனது மகள் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வௌியான பகீர் தகவல்


மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வௌியான பகீர் தகவல்

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை கைது செய்த நிலையில் நேற்று முன்தினம் (23) மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர்.

மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 23, 2025

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடும் பொலிசார்!


துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடும் பொலிசார்!

கந்தானை பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரியை கைது செய்ய கந்தானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கந்தானை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்,வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரி மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வீதியைக் கடக்கும் காட்சிகள் சி.சி.ரி.வி கமரா ஒன்றில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கந்தானை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591595 அல்லது 071 – 8591594 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, January 22, 2025

பொலிஸ் காவலில் இருந்த வவுனியா யுவதி தனது பாவாடையை கம்பியில் கட்டி பலியானது ஏன்?


பொலிஸ் காவலில் இருந்த வவுனியா யுவதி தனது பாவாடையை கம்பியில் கட்டி பலியானது ஏன்?

மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம் – அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய நேற்று (20) இரவு மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையைக் கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மருதானை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

அவர் தொங்கியிருந்த ஆடையை துண்டித்து, உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருதானை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தப் பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் இன்று (22) நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அனுராதபுர நீதிமன்றில் மீண்டும் மடையராக மாறிய பொலிசார்!! நீதிமன்றில் ஆப்பு வைத்த அருச்சுனாவின் சட்டத்தரணி!!


அனுராதபுர நீதிமன்றில் மீண்டும் மடையராக மாறிய பொலிசார்!! நீதிமன்றில் ஆப்பு வைத்த அருச்சுனாவின் சட்டத்தரணி!!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, ​​அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை “அர்ச்சுனா லோச்சன்” என்று பெயரிட்டனர்.

ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 21, 2025

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!


மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

தவுலகல பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 19 வயது மகள் ரூ.5 மில்லியன் கப்பம் கேட்டு கடத்தப்பட்டபோது கடமைகளைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், தவுலகல தலைமைக் காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் மத்திய மாகாண மூத்த துணைப் போலீஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் தவுலகல காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக தலைமைக் காவல் ஆய்வாளர் ஆர்.ஏ.எஸ்.எஸ். ரணசிங்க செயல்பட்டு வந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, தலைமைக் காவல் ஆய்வாளர் ஜி.ஜி. குசும் கமகெதர கடுகண்ணாவ காவல் நிலையத்திற்கும், குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர் ஜி.ஏ.எஸ். நிமல்சிறி வெலம்பட காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடத்தல் குறித்த புகார் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறியது உட்பட பல குற்றச்சாட்டுகள் காரணமாக இடைநீக்கங்கள் மற்றும் இடமாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளக காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி லலித் பத்திநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தவுலகல காவல் பிரிவின் ஹபுகஹயட தன்ன பகுதியில் கடத்தல் நடந்தபோது, ​​அந்த இடத்தை கடந்து சென்றதாகக் கூறப்படும் கம்பளை காவல் நிலையத்தில் கடமையில் இருந்த ஒரு உத்தியோகத்தர், தவுலகல காவல் துறைக்கு தகவல் அளித்தார். சம்பவம் குறித்து போலீஸ் செயல்பாட்டு அறையில் புகார் அளித்தும், தவுலகல போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு பிந்தி வந்த மகனின் வாய்க்குள் ஈட்டி சொருகிய அப்பா!! கொழும்பு மருத்துவமனையில் மகன்!! நடந்தது என்ன?


வீட்டுக்கு பிந்தி வந்த மகனின் வாய்க்குள் ஈட்டி சொருகிய அப்பா!! கொழும்பு மருத்துவமனையில் மகன்!! நடந்தது என்ன?

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மீன்பிடித் தடியால் தனது மகனின் வாயில் தாக்கியுள்ளார்.

அந்தக் கம்பி வாய்ப் பகுதியில் ஆழமாக ஊடுருவியதால் பாதிக்கப்பட்டவர், அதை அகற்ற முடியாமல், வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19) மாலை நடந்தது.

அடியாவல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சஜித் ரமேஷ் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய தந்தை, தாக்கப்பட்ட மகன், அவரது மனைவி மற்றும் அவர்களது ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். சம்பவம் நடந்த நாளில், மகன் வீட்டிற்கு வர தாமதமாகிவிட்டது என தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தீவிரமடைந்தது, கோபமடைந்த தந்தை திடீரென தனது மகனின் வாயில் வீட்டில் இருந்த மீன்களை குத்தும் ஆயுதத்தால் தாக்கினார். இந்த வன்முறைத் தாக்குதலின் விளைவாக, திருசூலம் போன்ற வடிவிலான பல கூர்மையான கூர்முனைகள் அவரது வாயில் ஊடுருவின.

வாயில் அந்த முனைகள் துளைத்த நிலையில், அதை அகற்ற முடியாமல், அப்படியே தங்கொட்டுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மாரவில அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த நேரத்தில், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர், அவரது நிலை மோசமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தந்தை அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், தந்தை காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தங்கொட்டுவ காவல்துறைப் பொறுப்பதிகாரி ஷிரான் பெரேரா தெரிவித்தார்.

யாழில் பயங்கரம்!! பிறந்து தொப்புள் கொடியும் வெட்டாத நிலையில் கிணற்றில் எறியப்பட்ட சிசு!!


யாழில் பயங்கரம்!! பிறந்து தொப்புள் கொடியும் வெட்டாத நிலையில் கிணற்றில் எறியப்பட்ட சிசு!!

சாவகச்சேரி, கைதடி பகுதியில் பிறந்த குழந்தையொன்று கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கைதடி மத்தி பகுதியில் இன்று (21) காலை குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

  குழந்தை பிரசவித்த உடனேயே கிணற்றில் வீசப்பட்டுள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியும் வெட்டப்படவில்லை. குழந்தையை வீசியிருக்கலாமென்ற சந்தேகத்தில் 2 பிள்ளைகளின் தாயொருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Monday, January 20, 2025

செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு!


செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் (India) நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தமையால் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என அவர் தரப்பு வழக்கறிஞர் மன்றில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீதிமன்றத்தால் வழங்கப்படும் அடுத்த திகதியில் அவர் முன்னிலையாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அந்தக் காரணங்களை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, January 17, 2025

காதலன் வெளிநாடு சென்று தன்னுடன் கதைக்கவில்லை என்ற விரக்தி!! 33 வயது புத்தளம் மெரினா ரயிலில் பாய்ந்து மரணம்!!


காதலன் வெளிநாடு சென்று தன்னுடன் கதைக்கவில்லை என்ற விரக்தி!! 33 வயது புத்தளம் மெரினா ரயிலில் பாய்ந்து மரணம்!!

பல வருட காதலன் ஜப்பான் சென்ற பின்னர் தன்னைப் புறக்கணித்ததால் விரக்தியடைந்த இளம் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் குட்ஷெட் சாலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 33 வயதான மெரினா பாலேரின் பெர்னாண்டோ என்பவரே இந்த விபரீத முடிவை எடுத்தார்.இந்த இளம் பெண் கடந்த 6 ஆம் திகதி முந்தல் சரணகம பகுதியில் புத்தளத்திலிருந்து கல்கிஸ்ஸை நோக்கிச் செல்லும் அலுவலக ரயிலில் குதித்துள்ளார்.

பலத்த காயமடைந்த அந்த இளம் பெண், சிலாபம் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் (07) உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த யுவதி நடத்திய முன்பள்ளி புத்தளம் நகருக்கு அருகில் அமைந்திருந்தது. இந்த முன்பள்ளியும் 2024 இல் தொடங்கப்பட்டது. அவருடைய காதலன் கேகாலையைச் சேர்ந்த ஒரு இளைஞன். இருவரும் பல வருடங்களாக உறவில் இருந்தனர். 
ஜப்பானில் வேலைக்குச் சென்றதிலிருந்து தனது காதலன் தன்னை அழைக்காததால் அந்த இளம் பெண் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார்.ரயிலில் பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டது என பிரேத பரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, January 16, 2025

அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உசா விபரீத முடிவால் பலி !


அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உசா விபரீத முடிவால் பலி !

ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார் நேற்று புதன் கிழமை மதியம் 2:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது சம்பவத்தில் வாசவன் உஷா வயது 54 என்ற ஒரு பிள்ளையின் தாய் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணன், தம்பி கொலைக்கு பழி தீர்த்த மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு பலிகளின் அதிரவைக்கும் பின்னணி!!


அண்ணன், தம்பி கொலைக்கு பழி தீர்த்த மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு பலிகளின் அதிரவைக்கும் பின்னணி!!

அண்ணன் தம்பியின் கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில் மன்னாரில் நடந்த துப்பாக்கி சூடு.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து இரண்டு கிராமத்தவர்களிடையே மோதலாக உருவெடுத்தது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்து இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்த சந்தேக நபர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் இருவர் உயிரழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தமது குடும்ப அண்ணன், தம்பியை கொன்ற அனைவரையும் கொல்லும் நோக்கில் அவர்களின் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாகவே பல கொலைகள், தாக்குதல் நடந்து வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இப்படி கொலை செய்வதன் ஊடாக மற்றவர்கள் கொலை செய்து விட்டு வெளியில் நடமாடுவோருக்கு தற்போது பயம் ஏற்பட்டு இருக்கிறது.

தமது அண்ணன், தம்பியின் கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில் நடந்த இந்த கொலைகள் போலவே வட்டுக்கோட்டையிலும் பழிவாங்கும் நோக்கில் கடந்த வருடம் ஒரு கொலை நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 15, 2025

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கி சூடு : இருவர் பலி | Shooting In Front Of Mannar Courthouse


மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கி சூடு : இருவர் பலி

புதிய இணைப்பு

மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக  துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்கான மூவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, January 13, 2025

யாழில் கலியாணம் கட்டி இரு மாதங்கள்! 19 வயது நவாஸ்கரன் ரயிலில் பாய்ந்து பலி!


யாழில் கலியாணம் கட்டி இரு மாதங்கள்! 19 வயது நவாஸ்கரன் ரயிலில் பாய்ந்து பலி!

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இன்று மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான, திருமணமாகி இரண்டு மாதங்களான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை புதுக்குடியிருப்புக்கு கொண்டு சென்று காசுக்காக ஆண்களுடன் உறவு கொள்ள வைத்த கணவனும் மனைவியும் பிடிபட்டது எப்படி?


கிளிநொச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை புதுக்குடியிருப்புக்கு கொண்டு சென்று காசுக்காக ஆண்களுடன் உறவு கொள்ள வைத்த கணவனும் மனைவியும் பிடிபட்டது எப்படி?

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும், அவரது கணவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில், கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மூன்று மாதங்களாக அழைத்து வீட்டில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பின்னர் குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமியிடம் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை செய்தபோது குறித்த சிறுமிக்கும் கிளிநொச்சியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் மூலமாக புதுக்குடியிருப்பு பெண்ணுக்கும் சிறுமிக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு சிறுமிக்கு பண ஆசையினை காட்டி சிறுமி புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டு மூன்று மாதங்கள் குறித்த சிறுமி தங்கியிருந்துள்ளார்.

குறித்த பெண் சிறுமியினை வைத்து தொழில் செய்து பணத்தினை சிறுமிக்கு கொடுக்க மறுத்ததனை தொடர்ந்தே சிறுமி வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

பின்னர் கிளிநொச்சி பொலிஸாரினால் கிளிநொச்சியில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்படதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு குடும்ப பெண்ணும் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, January 12, 2025

யாழில் கச்சான் பருப்பால் பரிதாபகரமாகப் பலியான குழந்தை !


யாழில் கச்சான் பருப்பால் பரிதாபகரமாகப் பலியான குழந்தை !

இன்று (12) யாழில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது.

இதன்போது சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தை நேற்று (11) கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியது.

பின்னர் குழந்தை உறங்கி விட்டது. உறங்கிய குழந்தை நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் இன்று (11) குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Friday, January 10, 2025

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு!!


மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு!!

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று (09.01) மாலை பெண்ணின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் ஆவார். இருப்பினும், அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலாடை மற்றும் லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை குறித்த பெண் அணிந்துள்ளார். அத்துடன் பெண்ணின் அருகில் இருந்த பையில் இருந்து கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேரூந்தில் பயணித்த சிட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இதுவொரு கொலையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எலிக்காய்ச்சல் வந்துதான் சாவாய்! யாழில் ஜேவிபி ஆதரவாளரான பாதர் அதகளம்! நடந்தது என்ன?


எலிக்காய்ச்சல் வந்துதான் சாவாய்! யாழில் ஜேவிபி ஆதரவாளரான பாதர் அதகளம்! நடந்தது என்ன?

எலிக்காய்ச்சல் வந்து சாவாய்,
அனுரவை நான் தான் யாழ்ப்பாணம்
அழைத்து வந்தேன் எனவும், நிதிசேகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தியும் அடாவடியாக, நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் (8) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி இருவரும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எலிக்காய்ச்சல் வந்து சாவாய்- அச்சுறுத்தி அடாவடி

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நெல்லியடிநகரில் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது நிதி கொடுக்க மறுத்தவர்களை ஜனாதிபதியிட் ஒளிப்படத்தைக் காண்பித்து, அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்றப்பட்ட போது வர்த்தகர்களுக்கும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டோருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந் நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்து நிதியை சேகரித்துள்ளனர். எனினும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.

நிதிகொடுக்ப் மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து சாவாய் என்றும், அனுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன் எனவும், அனுர ஆட்க்களைப் பற்றித் தெரியும் தானே எனவும் அச்சுறுத்தி நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday, January 8, 2025

யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலி யல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன்


யாழில்  சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலி யல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

குறித்த தாயார் தனது மகனால் பாலி யல்ரீதியில் சித்திரவதைப்பட்டு தொடை பகுதிகளில் கடிக்கப்பட்ட காயங்கள் மற்றும் கண்டல்களுக்காக சிகிச்சை பெற வந்த போதே இச் சம்பவம் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனை உடனடியாக புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்ப வைத்தியர் முற்பட்ட போது தாயார் கும்பிட்டு மன்றாடி அவ்வாறு செய்ய வேண்டாம் என கூறிச் சென்றுள்ளாராம். வடமராட்சியில் பிரபல பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த சிறுவன் 15 வயதில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளான். அது தொடர்பாக பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந் நிலையில் வீட்டில் இருந்த சில நகைகள் காணாமல் போனமை தொடர்பாக ஆராய முற்பட்ட போதே சிறுவன் தாய் மற்றும் சகோதரியால் பிடிக்கப்பட்டுள்ளான். அதன் பின்னரே சிறுவன் போதைப்பொருள் வாங்க பணம் பெறுவதற்காக நகைகளை போதைப்பொருள் விநியோகத்தர்களுக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 

உடனடியாக இது தொடர்பாக பொலிசாரிம் முறையிட தாயார் சென்ற போது சிறுவன் துாக்கில் தொங்கியுள்ளான். இதனை அவதானித்த சிறுவனின் சகோதரி கத்திக் குளறவே சிறுவனை அயலவர்கள் காப்பாற்றி வைத்தியசாலை கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் சிறுவனை எங்கும் செல்லாது வீட்டில் மறித்து வைத்த போது இரு தடவைகள் துாக்கில் தொங்க முற்பட்டும் தனது கைகள் மற்றும் உறுப்புக்களை கத்தியால் கீறி வன்முறை செய்ததால் கடும் அச்சமுற்ற தாய் சிறுவனுக்கு தேவைப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் கொடுத்து வந்துள்ளனர்.

சிறுவனின் தந்தை ஓரிரு வருடங்களுக்கு முன் கனடா சென்றுள்ளார். அதன் பின் போதைக்கு அடிமையான சிறுவன் தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் தங்கியிருந்த போது 20 வயதான சகோதரிக்கு இரவில் பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் தாயார் தனது மகளை தனது அக்கா வீட்டில் சென்று தங்குமாறு கூறி சிறுவனுடன் தனித்திருந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையிலேயே சிறுவன் போதைப் பொருளை உட்கொண்டு விட்டு இரவு நேரத்தில் தாயை கடுமையாகத் துஸ்பி ரயோகம் செய்து வந்துள்ளது தெரியவருகின்றது. 

தனது மகன் உயிரோடு இருக்க வேண்டும் என நினைத்தே தான் நடைப் பிணம் போல் வாழ்வதாக குறித்த பெண் வைத்தியருக்கு தாயார் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுவன் பிளேட் மற்றும் கத்தி போன்றவற்றால் தனது உடலை தானே கீறி இரத்தம் வழிந்தோடும் போது எடுத்து தாயாருக்கு காட்டிய வீடியோக்களையும் தாயார் வைத்தியருக்கு காட்டியுள்ளார். போதைப் பொருள் கிடைக்க சில மணி நேரம் தாமதமானால் கூட மகன் தற்கொலை செய்ய முற்படுவதாகவும் தாயார் கூறியுள்ளார்.

சிறுவன் பாடசாலையில் சிறந்த விளையாட்டு வீரனாக இருந்ததாகவும் தமது பிரதேச இளவயது உதைபந்தாட்ட அணியில் சிறப்பாக விளையாடி வந்ததாகவும் அதன் போது ஏற்பட்ட தவறான நட்புக்கள் காரணமாகவே சிறுவன் போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும் தாயார் கூறியுள்ளார். தற்போதும் குறித்த சிறுவனுக்கு வடமராட்சியில் இன்னொரு பகுதியில் உள்ள இரு விளையாட்டு வீரர்களே போதைப் பொருளை வீட்டில் வந்து கொடுத்து காசு வாங்கிச் செல்வதாகவும் அதிர்ச்சித் தகவல்களை தாயார் கூறியுள்ளார். நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபா அளவில் போதைப் பொருள் தனது மகனுக்கு தேவைப்படுவதாகவும் தாயார் கூறியுள்ளார்.

பெற்றோரே அவதானமாக இருங்கள். போதைப் பொருட்களு்ககு அடிமையாகும் உங்கள் குழந்தைகள் தொடர்பாக நீங்கள் தொடக்கத்தில் ஒரு போதும் அறிய மாட்டீர்கள்…. பணத் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் உள்ள பெறுமதி வாய்ந்த பொருட்கள் அல்லது நகை, பணம் காணாமல் போகும். அத்துடன் போதைப் பொருளுக்கு அடிமையான உங்கள் பிள்ளை தனிமையை நாடி படிக்கின்றது போல் ஒரு அறைக்குள் இருப்பான்….. மிக மிக அவதானமாக இருங்கள்…
(பிரதி)

யாழ் வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி !


யாழ் வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி !

வல்லைப் பகுதியில் இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தாவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் உயிரிழந்துள்ளார் .

யாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்து சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது

படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தாவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன் வயது 21 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, January 6, 2025

யாழ்ப்பாணத்தில் காணப்படும் மலக்கழிவுக் குளங்கள்!! அதிர்ச்சித் தகவல்கள்


யாழ்ப்பாணத்தில் காணப்படும் மலக்கழிவுக் குளங்கள்!! அதிர்ச்சித் தகவல்கள்

யாழ்ப்பாணத்தின் மலக்கழிவுக் குளங்கள்🥲

படத்தில் வடமராட்சியின் 4 உள்ளூராட்சி மன்றங்களின்
1-கரவெட்டி பிரதேச சபை
2- பருத்துத்துறை நகரசபை
3-வல்வெட்டிதுறை நகரசபை
4- பருத்துத்துறை நகரசபை

மலகழிவு, உணவக கழிவு நீர் கொட்டப்படுவதற்காக தோண்டப்பட்ட ஒரு குளம்! பச்சையாக சொல்வதானால் பீ குளம் என்றே வைத்துக்கொள்ளுங்கள்!
இதன் அண்மித்த தூரத்தில் யாழ்ப்பாண நீரை நன்னீராக்கும் ஆறுமுகம் திட்டத்தின் நீர் பரப்பு காணப்படுகின்றது!

சாவகச்சேரி உள்ளிட்ட நகர/ பிரதேச சபைகளும் இவ்வாறான குள அமைப்பிலேயே மலக்கழிவுகளை கொட்டுகின்றன!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் சுண்ணாம்புக்கற் பாறை வெடிப்புகளிலேயே தொடர்பு பட்ட நிலையில் Aquifer ஆக உள்ளது என்பது இப்போது யாவரும் அறிந்ததே!

யாழ்ப்பாணத்தின் ஆழத்தில் உள்ள blackish water எனப்படும் உவர் நீருக்கு மேல் fresh water lens ஆக மிதந்துகொண்டிருக்கும் நிலத்தடி நன்னீரின் அளவு என்பது கிட்டத்தட்ட 3- 4 இரணைமடுக் குளங்களின் மொத்த கொள்ளவுக்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது. இரணைமடுக்குளத்தின் 2 அடி அதாவது 10-20 MCM தண்ணீருக்காக பிரதேசவாதத்தையும் வன்மங்களையும் கொட்டும் நம் சமூகம் எமது மிகப்பெரிய சொத்தான கிட்டத்தட்ட 300-500MCM நிலத்தடி நன்னீரை பாதுக்காக்க எந்த அளவுக்கு முயற்சி எடுக்கிறோம் என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.

சுண்ணாம்புக்கல் நிலத்தட்டு கொண்ட எமது புவியியில் அமைப்பில் திண்மக்கழிவுகளை கவனமாக கையாளாமல் விட்டால் அவை எமது நிலத்தடி நீரை மிக்கப்பெரிய அளவில் பாதிக்கும். யாழ்ப்பாணத்தான் குடிப்பதற்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிவிட நினைக்கும் நாம் நமது பகுதியின் விவசாயம், கால்நடைகள், சூழல்த்தொகுதியின் ஏனைய உயிரினங்களுக்கான நன்னீரையும் பற்றி சிந்திக்க வேண்டும்.
விவசாயத்துக்கும் கால்நடைகள் உள்ளிட்ட அந்த ஏனைய உயிரினங்களுக்கும் யார் தண்ணீரை இரணைமடுவிலும் தாளையடியிலும் பாலியாற்றிலும் விலைகொடுத்து வாங்கி கொடுப்பார்கள்?

பல்லாயிரும் வருடங்களாக நமது நிலத்தடி நீரை நாம் கவனமாக முகாமைத்துவம் செய்து வந்ததாலும் மலக்கழிவு அகற்றல் உள்ளிட்ட விடையங்களில் பாரம்பரியமான முறைகளை பயன்படுத்தி போதிய இடைவெளிகளை கொடுத்து அவை நிலத்தடி நீருடன் கலக்காமல் பாதுகாத்து வந்திருக்கிறோம்.
இப்போது வசதிகளும் பணமும் வந்ததும் எமது சொந்த வளங்களை உதாசீனப்படுத்துகிறோம்.
எங்கள் சொந்த சுயநலத்துக்காக சமூகத்தின் உயிர்நாடியான நீர் வளத்தை மாசுபடுத்துகிறோம்.

வெளியூரில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து பாவித்து அதில் வரும் கழிவுத்தண்ணீரையும் கொண்டு படத்தில் உள்ளவாறு புதிய பல குளங்களை எதிர்காலத்தில் உருவாக்க உள்ளோம். யாழ்பாணத்தின் நீர் முகாமைத்துவத்திற்கு முதலில் செய்யவேண்டியது எமது நிலத்தடி நீரை பாதுகாப்பது.

1.அதன் முதற் படியாக திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு குடாநாடு தழுவிய பொருத்தமான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
மலக்கழிவுகள், இரசாயண கழிவுகள், வாகன கழுவுமிடங்கள், திருத்துமிடங்கள், பெற்றோல் நிரப்பு நிலைய கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலக்காமல் பொருத்தமாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்டவேண்டும்.

2. யாழ்பாணத்தின் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சும் நிறுவனங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு குறிப்பாக யாழ்ப்பாணத்து நிலத்தடி நீரை போத்தலில் அடைத்துவிற்கும் வியாபாரம் முடிவுறுத்தப்படவேண்டும். அவ்வாறான உற்பத்திகள் அதிக lens உள்ள அல்லது ஆற்று நீரை நீர் மூலமாக பயன்படுத்தக்கூடிய இடங்களுக்கு மாற்றப்படவேண்டும்.

3. நிலத்தடி நீர் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது யாழ்ப்பாணத்தின் அத்தனை ஜீவராசிகளுக்கும் சொந்தமானது என்பதும் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் சுண்ணாம்புக்கல் வெடிப்புகளூடு சுண்ணாகம் உள்ளிட்ட Aquifer களாக பின்னிப்பிணைந்துள்ளது. ஆக இந்த நீரை பாதுகாக்க பல்வேறு தரப்புகளும்
ஒன்றிணைந்து புரிந்துணர்வோடும் பொறுப்புணர்வோடும் கரம் கோர்த்துப் பயணிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், துறைசார் வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்🙏

நன்றி.

திருநாவுக்கரசு தயந்தன்
2025.01.06

(மேற்படி மலக்கழிவுகள் கொட்டப்பட உருவாக்கப்பட்ட குளம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து உதவிய நண்பர்களுக்கு நன்றி)

16 வயதான கவீஷா தெவ்மணியை எங்கேயாவது கண்டால் உடனடியாக அறிவிக்கவும்!!


16 வயதான கவீஷா தெவ்மணியை எங்கேயாவது கண்டால் உடனடியாக அறிவிக்கவும்!!

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சம்பவத்தில் 16 வயதான இரத்நாயக்க முதியன்சேலாகே கவீஷா தெவ்மணி எனும் சிறுமியே காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ல பொலிஸார், சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் 071-8591528 அல்லது 055-2295466 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

15 வயதான மாணவியுடன் பல தடவைகள் உறவு கொண்ட மாமாவுக்கு நடந்த கதி!!


15 வயதான மாணவியுடன் பல தடவைகள் உறவு கொண்ட மாமாவுக்கு நடந்த கதி!!

எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது 05 மாத சிறுமியை பா லியல் வன்பு ணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் சுமார் நான்கு வருடங்களாக சிறுமியின் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

பொலிஸில் தாயார் முறைப்பாடு
இந்நிலையில் வும், தனது தாயும் சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மாமா தன்னை பாலி யல் வன் கொடுமை செய்ததாக தாயிடம் கூறியதையடுத்து அது தொடர்பில் பொலிஸில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கிளிநொச்சியில் விப ச்சார விடுதி! 15 சிறுமி உட்பட 3 பேர் கைது!!


கிளிநொச்சியில் விப ச்சார விடுதி! 15 சிறுமி உட்பட 3 பேர் கைது!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபச் சார விடுதி ஒன்றை பொலிசார் முற்றுகையிட்ட போது அங்கு  15 வயது சிறுமி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

15 வயது சிறுமி கைது.

A-34 பரந்தன் -முல்லைத்தீவு வீதியில் 1-ம் கட்டை எனப்படும் இடதில் 19-ம் ஒழுங்கையில் உள்ள சிறுவர் முன்பள்ளி (Pre-School) அருமை உள்ள வீடு ஒன்றில் 15 வயது உடைய சிறுமியை வைத்து பாலி யல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குறித்த பாலி யல் தொழில் நடாத்தி வந்த பெண் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மலையாளபுரத்தில் இயங்கி பொலிசாரார் கைது செய்யப்பட்ட விபச்சார விடுதியின் பாலியல் தொழிலாளி உடைய partner என்றும் கூறப்படுகிறது.

குறித்த இந்த பெண் பல பெண்களை அழைத்து வந்து வாடகை வீட்டில் சில மாதங்களாக வைத்து பணத்திற்கு விப ச்சார விடுதி நடாத்தி வந்துள்ளார். அதற்கு உரிய டீலர் ஒருவரும் குறித்த பகுதியில் இருந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கண்டுகொள்ளாத நிலைமை தொடந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனவே குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் மேலிடத்திட்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பாலி யல் தொழில் செய்யும் பெண்ணிடம் தொடர்பு கொண்ட போது “15 வயது சிறுமி உள்ளரார் 10,000 ரூபா, 20 வயது பெண் உள்ளார் 7,000 ரூபா” என்று பேரம் பேசி உள்ளார்.

குறித்த பெண் பல இடங்களில் இருந்து சிங்கள பெண்கள் உட்பட பல பெண்களை அழைத்து வந்து அங்கே வைத்து விபச் சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறப்படுகின்றது.

எனவே குறித்த பொலிசார் பேரம் பேசிய தங்கைக்கு ஒப்புக் கொண்டு உரிய இடத்திற்கு சென்று பணத்தை வழங்கிய போது 15 வயது சிறுமியை அறைக்குள் அழைத்து செல்வதற்கு குறித்த பாலி யல் தொழிலாளி பெண் அனுமதித்து உள்ளார். அந்த நேரம் ஏனையா பொலிசார் சுற்றி வளைத்து சம்மந்தப்பட்ட எல்லோரையும் கைது செய்து உள்ளனர்.

15 வயது சிறுமி என்ற வகையில் “சிறுவர் துஸ்பி ரயோகம்” என்ற அடிப்டையில் கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

(இந்த பதிவு சமூக விழிப்புணர்வுக்காக விடயத்தை முழுமையாக பதிவு செய்துள்ளோம்)
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job