நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, January 15, 2025

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கி சூடு : இருவர் பலி | Shooting In Front Of Mannar Courthouse


மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கி சூடு : இருவர் பலி

புதிய இணைப்பு

மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக  துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்கான மூவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment