கிளிநொச்சியில் நிறை வெறியில் கொலைசெய்த சாரதி!! கட்டப்பட்டுள்ள நீதி தேவதையின் கண்கள் அவிழ்க்கப்பட வேண்டும்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
தாய் தந்தை இரண்டு மகள்கள் என அழகான குருவி கூடு போல் இருந்த வாழ்வை நாசமாக்கிவிட்டீர்களே. சில சாரதிகளின் பொறுப்பற்றத் தனத்தால் இப்படி எத்தனை சம்பவங்கள்.
விறகு வெட்டி அதனை ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து துவிச் சக்கர வண்டியில் கிளிநொச்சி நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்து அதில் தனது மகளை கற்பித்து தனது குடும்பத்திலிருந்து முதல் முதலாக உயர்தரம் படிக்க கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுப்பிய தந்தை தனது பிள்ளை எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்குச் செல்லும் என்ற கனவோடு இருந்த போது முதல் நாள் பாடசாலை பயணத்தையே மஞ்சல் கோட்டில் இறுதிநாளாகவும் மாற்றினார் அன்று ஒரு சாரதி.
இந்த சம்பவத்தையும் நாம் ஒரு சில மாதங்கள் பேசினோம், முகநூலில் முழங்கினோம், ஆர்ப்பாட்டம் செய்தோம் கடந்து சென்றுவிட்மோம். எதுவும் நடக்கவில்லை ஆனால் அதே வீதியில் விபத்துக்கள் மட்டும் தொடர்ந்தும் நடக்கிறது.
இப்போது அந்த தந்தையும் உயிரோடு அவர்களுக்கு நீதி கிடைத்ததா என்றும் தெரியவில்லை. ஆனால் சாரதி இப்போது தனது வழமையான பணிகளில் இருப்பார் என்றே கருதுகிறேன். இப்போது அந்த சாரதி தனது பிள்ளையின ்படிப்பில் அக்கறையோடு இருப்பார்.
இந்த சம்பவமும் இப்படிதான் கடந்து சென்றுவிடும், சாரதி பிணையில் வந்துவிடுவார். வழக்குகள் நடக்கும், நீதிமன்றம் சாட்களையும், ஆதாரங்களையும் கோரும், சில சட்டத்தரணிகள் அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டி இரண்டு உயிர்களை கொலை செய்த சாரதிக்கு வாகனம் ஓடவே தெரியாது, அது அவர் இல்லை என்றும் வாதிடலாம். கண்களை கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதைக்கு இவை ஒன்றும் தெரியப்போவதில்லை.
உண்மை எங்கோ ஒரிடத்தில் இவற்றை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும்.
ஆனால் அந்த குடும்பத்தில் கணவன் தனது அன்புக்குரிய அழகான இளம் மனைவியையும் பாசத்திற்குரிய அழகான குழந்தையையும் இழந்து துடித்துக்கொண்டிருப்பார்.
ஆறு வயது சிறுமி தனது உயிர் அம்மாவை இழந்து அம்மாவின் அரவணைப்பை இழந்து, தனது பாசத்திற்குரிய தங்கையையும் இழந்து வெறுமையாய ் நிற்கும்.
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஒரு சில நாட்கள் கூடி நின்று ஆறுதல் சொல்வார்கள் பின்னர் எட்டுச்செலவு 31 ஆம் நாட்கள் கடந்துசெல்ல அவர்களும் தங்களின் வழமையான பணிகளுக்குத் திரும்பி விடுவார்கள்.
தந்தையும் மகளும் தனி மரங்களாக ஏக்கங்களோடு தனித்திருந்து தவித்துக்கொண்டிருப்பார்கள். விட்டுச் சென்ற இருவரின் கடந்தகால நினைவுகள் அவர்களை வாட்டி வதைக்கும்.
சில வேளை நாங்கள் இப்படியான இன்னொரு விபத்தை பற்றி பேசிக்கொண்டிருப்போம். இந்த சாரதியும் பிணையில் வந்து தனது குடும்பம் பிள்ளைகளோடு பயணித்துக்கொண்டிருக்கலாம்.
காலம் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும். இதே வீதியில் விபத்துக்களும் நடந்துக்கொண்டிருக்கும. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்ற விளம்பர பலகைகள் மட்டும் வீதிகளில் தொங்கிக்கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment