நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, January 6, 2025

16 வயதான கவீஷா தெவ்மணியை எங்கேயாவது கண்டால் உடனடியாக அறிவிக்கவும்!!


16 வயதான கவீஷா தெவ்மணியை எங்கேயாவது கண்டால் உடனடியாக அறிவிக்கவும்!!

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சம்பவத்தில் 16 வயதான இரத்நாயக்க முதியன்சேலாகே கவீஷா தெவ்மணி எனும் சிறுமியே காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ல பொலிஸார், சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் 071-8591528 அல்லது 055-2295466 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment