மாங்குளத்தில் சுவிஸ் அங்கிள் நையப்புடைக்கப்பட்டதற்கு காரணம் லட்சக் கணக்கில் காசு வாங்கிய பின் ஏமாற்றிய யுவதியின் லீலைகளா?
மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, பெண்களை தாக்கியதாக குறிப்பிட்டு நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.
2 வருடங்களின் முன்னரும் இதேநபர், இதே வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மனநல காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறையை பூர்வீகமாகவும் தற்போது சுவிஸில் வசிப்பவருமான நபர் ஒருவரே இவ்வாறு கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
தான் சில வருடங்களின் முன்னர் வரை பனிக்கன் குளத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் நட்பாக இருந்ததாகவும், அவருக்கு பெருமளவு பணம் அனுப்பியுள்ளதாகவும் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்ட நபர் கூறுகிறார்.
அந்த பெண் தற்போது, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர், சுவிஸ் நபர் தொந்தரவு கொடுப்பதே சர்ச்சையின் பின்னணி.
2 வருடங்களின் முன்னர் அந்த நபர், குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த போது அயலவர்களால் பிடித்து தாக்கப்பட்டார்.
நேற்றும் அந்த நபர் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த பெண்ணையும், தாயாரையும் அவர் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது. அயலவர்கள் அந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதால் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment