சுவிஸ்லாந்தில் சூரிச் Volketswil பகுதியில் 45 வயதான கலைவாணி ஜெயசேகரன் என்ற தமிழ்க் குடும்பப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சுப்பர்மார்க்கட் தரிப்பிடத்தில் காரினுள் இருந்த 38 வயதான தர்மினி தேவரஞ்சன் என்ற பெண்ணைத் தாக்கி மரச்சட்டம் ஒன்றினால் அப்பெண்ணின் தலையில் அடித்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே கலைவாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவரின் காரினுள் தர்மினி கதைத்துக் கொண்டிருந்த போதே அங்கு வந்த கலைவாணி தர்மினி மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரியவருகின்றது.
காரை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக ஓடத் தொடங்கியதர்மினியை துரத்தித்துரத்தி கலைவாணி தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் உடனடியாக கலைவாணியை விலங்கிட்டு கைது செய்ததாகவும் கள்ளக்காதல் காரணமாகவே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment