யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 39 வயதான ஆசிரியை மீது கனடாவிலிருந்து 41 வயதாக குடும்பப் பெண் ஒருவர் இலங்கையில் உள்ள வெளிளிநாட்டு முறைப்பாடுகளை கவனிக்கும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அதன் விபரங்கள் மற்றும ஆசிரியையின் புகைப்படங்கள் உட்பட பல ஆதாரங்களை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியை திருமணமாகி 2 பிள்ளைகளின் தாய். இவரது கணவர் 2016ம் ஆண்டளவில் வெளிநாடு சென்ற போது தொடர்பில்லாது காணாமல் போய் விட்டாராம்.
இந் நிலையில் பேஸ்புக் மூலமாக தனது 44 வயதான கணவருடன் அறிமுகமாகி தற்போது தன்னிடமிருந்து கணவரை பிரித்து வைத்துள்ளது மட்டுமல்லாது பெருமளவு பணத்தையும் குறித்த ஆசிரியைக்கு கொடுத்துள்ளதாக முறையிட்டுள்ளார் கனடா குடும்பப் பெண். யாழ்ப்பாணம் சென்ற தனது கணவன் ஒரு வருடமாகியும் மீளவும கனடா வராது குறித்த ஆசிரியையுடன் தங்கியுள்ளாராம். அத்துடன கணவனை மீளவும் கனடா செல்லுமாறு கூறச் செல்லும் தனது உறவுகள் மீது தாக்குதல் நடாத்துவதுடன் அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ரவுடிகள் மூலம் அச்சுறுத்தி வருவதாகவும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து யாழ் வரும் போது தன்னிடமிருந்த 75 பவுண் நகைகளை தனக்கு தெரியாது இலங்கைக்கு கொண்டு சென்றதுடன் ஒரு லட்சம் கனேடிய டொலர்களுக்கு மேலாக வங்கியிலிருந்து இலங்கைக்கு மாற்றியுள்ளதாகவும் கனடா குடும்பப் பெண் ஆதாரங்களுடன் பொலிசாருக்கு முறையிட்டுள்ளார். இவரது இந்த நடவடிக்கையால் தானும் தனது 15, 12 வயதாக இரு பெண் பிள்ளைகளும் நிர்க்கதியான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment