Home »
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை தமிழக அரசு தடை செய்துள்ளதையடுத்து அதன் பிரதமர் உருத்திரகுமாரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். “மலையகத் தமிழர்களின் 200 வருட துயரம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதியை மறுத்த இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு | Former Ltte Negotiator Slams Tamil Nadu Government நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த 15.10.2023 ஆம் திகதி நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. பேச்சு சுதந்திரம் அத்தியாவசியம் இந்த ஜனநாயகப் பண்பற்றசெயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று.“மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச் சுதந்திரம் அத்தியாவசியமானது.” இந்த கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்த தமிழக அதிகாரிகள், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதி மறுப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை தமிழக அரசு தடை செய்துள்ளதையடுத்து அதன் பிரதமர் உருத்திரகுமாரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
“மலையகத் தமிழர்களின் 200 வருட துயரம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதியை மறுத்த இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Former Ltte Negotiator Slams Tamil Nadu Government
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த 15.10.2023 ஆம் திகதி நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது.
பேச்சு சுதந்திரம் அத்தியாவசியம்
இந்த ஜனநாயகப் பண்பற்றசெயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று.“மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச் சுதந்திரம் அத்தியாவசியமானது.”
இந்த கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்த தமிழக அதிகாரிகள், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதி மறுப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment