நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, October 23, 2023

காரில் வந்த குழுவினரால் அதிகாலைவேளை கடத்தப்பட்டார் பெண் | Woman Was Abducted Early In The Morning


காரில் வந்த குழுவினரால் அதிகாலைவேளை கடத்தப்பட்டார் பெண்
காரில் வந்த குழு ஒன்றினால் குடும்ப பெண் ஒருவர் இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் குறித்த சம்பவம் நேற்று (23) அதிகாலை இடம்பெற்றது. இதில். 49 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டவராவார்.

 சந்தேகநபரும் காரும் பிடிபட்டன

குறித்த பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு கார் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Woman Was Abducted Early In The Morning

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பாலாவி ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கற்பிட்டி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அந்த காரை தடுத்து நிறுத்துமாறு கற்பிட்டி காவல்துறையினர் ஏனைய காவல் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.

காரில் இருந்து குதித்து தப்பிய பெண்

இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதன்போது, காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் காரின் வேகம் குறைந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படும் கற்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரில் இருந்து தப்பிய பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஆனமடுவ காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment