நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 29, 2023

இடியுடன் கூடிய கனமழை: பொது மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை! | Weather Today Sri Lanka


இடியுடன் கூடிய கனமழை: பொது மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை!

வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment