Monday, March 18, 2024

யாழ் சந்தி சலூனுக்குள் 13 பேரால் சீரழிக்கப்பட்ட 14 வயது சிறுமி: 70 வயது தாத்தாவும் ஒருவர்!


அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் 4 வருடங்களாக பலா த்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக, அநுராதபுரம், யாழ்ப்பாணம் சந்தியில் உள்ள ரத்னசிறி சலூன் நடத்துனரான 57 வயதான டி.எம்.திலகரட்ன, அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட 47 வயதான முச்சக்கர வண்டி சாரதி அனில் பியரத்ன ஆகிய இருவருமே  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

14 வயதுடைய பாடசாலை மாணவியை ஒரு குழுவினர் தொடர்ச்சியாக பலா த்காரம் செய்வதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முதலாவது சந்தேக நபரான டி.எம்.திலகரட்னவுக்குச் சொந்தமான யாழ் சந்தியில் உள்ள ரத்னசிறி சலூனின் பின் அறைக்குள் சிறுமியை அழைத்துச் சென்று, சந்தேகநபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும், சிறுமியை பலமுறை பாலி யல் பலா த்காரம் செய்த மேலும் 11 சந்தேக நபர்களை கைது செய்ய உள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸ் குழு ஆரம்பித்துள்ளதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களால் பலா த்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்த இரு சந்தேக நபர்களைத் தவிர, தன்னை வன்பு ணர்ச்சி செய்த சந்தேக நபர்களில் 70 வயதுடைய ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதியவர், ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பிரிவில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டரின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சலூன் உரிமையாளர் சிறுமியை நான்கு வருடங்களாக வன்பு ணர்ச்சி செய்து 100, 200, 250 ரூபா பணத்தைக் கொடுத்து ஏமாற்றி வீட்டுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த மாணவி வலைப்பந்து, உதைபந்தாட்டம், கிரிக்கட் மற்றும் எல்லே பாடசாலை மட்ட மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுமி என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job