நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, March 12, 2024

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு வெட்டிக்கொலை: சாதி மாறி திருமணம் செய்ததால் எழுந்த சர்ச்சையால் விபரீதம்!

யாழ்ப்பாணம், பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை தாக்கப்பட்டு கடத்தப்பட்டவர், அடித்து கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாதிய விவகாரம் ஒன்றினால் ஏற்பட்ட மோதலே வாள்வெட்டாகி, கொலையில் முடிந்துள்ளது.

நேற்று (11) மாலை இந்த கடத்தல் சம்பவம் நடந்தது.

காரைநகரில் இருந்து பொன்னாலையூடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

கார் மற்றும் வாகனமொன்றில் வந்த மற்றொரு குழுவினர் அவரை தாக்க முயல, பவித்திரன் தனது மனைவியுடன் பொன்னாலை கடற்படை முகாமுக்குள் தஞ்சம் கோரி ஓடினார்.

எனினும், கடற்படையினர் அப்போது பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கவில்லை.

தமக்கு தேவையற்ற பிரச்சினை வரும், முகாமை விட்டு வெளியில் செல்லுங்கள் என குறிப்பிட்டு, தம்பதியினரை முகாமுக்கு வெளியில் கலைத்துள்ளனர்.

அவர்கள் முகாமை விட்டு வெளியேற்றப்பட்ட போது, முகாம் வாசலில் வைத்து, பவித்திரனின் முகத்தில் முனை மழுங்கிய ஆயுதமொன்றினால் கடத்தல் குழு தாக்கியுள்ளது. அந்த குழுவிலிருந்த படையப்பா என்பவனே தாக்குதலை நடத்தியுள்ளான்.

இந்த தாக்குதலினால் நிலைகுலைந்த பவித்திரனை கடத்தல் குழு, காருக்குள் தூக்கிப் போட்டது. பவித்திரனின் மனைவியை மற்றைய வாகனத்தில் இழுத்து ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

பவித்திரன் வெட்டுக்காயங்களுடன் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கடத்தல்காரர்களினால் தூக்கிப் போடப்பட்டுள்ளார். அவரது இரண்டு கைகளிலும் ஒவ்வொரு விரல்கள் வெட்டப்பட்டிருந்தன. காலிலும் வெட்டுக்காயம் காணப்பட்டது.

உயிராபத்தான நிலையில் காணப்பட்ட பவித்திரன் மீட்கப்பட்டு, உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை மனைவி அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்கள் முரண்பட்டமையினால், வன்முறைக்கும்பலினால் சித்தன்கேணி பகுதியில் குறித்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்

தொடர்ந்து இறந்த நபரின் மனைவியால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

சந்தகநபர்களின் குழுவொன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பகுதியொன்றில் பதுங்கியிருந்த போது, பொலிசார் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரன் ஒருவர், இரண்டு வருடங்களின் முன்னர் சாதி மாறி திருமணம் செய்துள்ளார். பின்னர் 2022ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் அவர்களின் பிரதேசத்தில் உள்ள கோயில் திருவிழாவின் போது, அந்த இளைஞன் சுவாமி தூக்க முயன்றார். அப்போது சிலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சாதி மாறி திருமணம் செய்ததால் சுவாமி தூக்க முடியாது என அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

கோயிலில் இருந்து வெளியேறிய அந்த இளைஞன், தனது மூத்த சகோதரனன பவித்திரனிடம் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பவித்திரன், தனது தம்பியை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டு, வட்டுக்கோட்டை, மாவடியில் வைத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்களை வாளால் வெட்டியுள்ளார்.

அதன்பின்னர், பிரதேசத்தை விட்டு வெளியேறிய அவர், மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று, மாலை 3 மணியளவில் வட்டு தென்மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற போது, அவர் வருவதை அறிந்த குழுவினர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job