Tuesday, August 29, 2023
யாழில் வாள்கள், அடியாட்களுடன் சென்று தனது மனைவியைக் கடத்திச் சென்ற கணவன்!! அடங்காத ஆசையா?
யாழில் வாள்கள், அடியாட்களுடன் சென்று தனது மனைவியைக் கடத்திச் சென்ற கணவன்!! அடங்காத ஆசையா?
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கணவனால் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்த்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அவர்களது தாயார் வீடுகளில் வசித்துவந்துள்ளனர்.
இந் நிலையில் இன்றையதினம் திடீரென கணவரும் அவரது சகாக்கள் சகிதம் வாள் கொண்டு சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தனது மனைவியை அவளது விருப்பமின்றி கார் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் | Dollar Rate Banks Today Exchange Rate
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் (29) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 315.56 ரூபாய் மற்றும் 330.38 ரூபாய் ஆக மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியிலும்
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.73 ரூபாய் முதல் 315.70 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாக மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Monday, August 28, 2023
தமிழர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் செய்த மோசமான செயல் | Tamil Wedding Celebration In Sri Lanka
தமிழர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் செய்த மோசமான செயல்
திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட் ஆகிய ஐந்து மாதங்களில் இந்த திருட்டு நடந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருட்டுச் சம்பவம்
திருகோணமலை மாணிக்கவாசகர் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Tamil Wedding Celebration In Sri Lanka
தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்போது வேறு திருமணம் செய்துள்ளதாக 60 வயதுடைய ஆசிரியர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலில் திருகோணமலை பொலிஸில் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்திருந்தார். நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவை ஆசிரியர் சந்தித்துள்ளார்.
தங்க நகை
இதனையடுத்து, இது தொடர்பான விசாரணைகளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் கிள்ளிவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.
திருடப்பட்ட தங்க நகைககளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தயாராகி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழில் ஊசி மூலம் ஹெரோயின் ஏற்றியவர் கிருமித்தொற்றுக்குள்ளாகி மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்.
யாழில் ஊசி மூலம் ஹெரோயின் போதை பொருளை பாவித்து வந்த இளைஞர் ஒருவர் இருதயத்தில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நீண்ட காலமாக ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக ஹரோயின் உயிர்கொல்லிப் போதைப் பொருளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஊசி மூலம் நோக்கிருமி உடலில் தொற்றுக் கொள்ளாக்கிய நிலையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடும் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் அடிப்படையிலும் அவரிடம் வைத்தியர்களால் வினாவப்பட்ட போது குறித்த நபர் உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் தெரிய வந்தது.
இந்நிலையில் குறித்த நபரை மேலதிக வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திய நிலையில் கிருமி தோற்று ஆதிகளவில் இதயத்தை தாக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒருவர் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் போதை பொருளை பாவித்த நிலையில் உடலில் அதிகளவு கிருமித் தொற்று ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஊசி மூலம் ஹெரோயின் போதை பொருளை ஏற்றிய சுமார் 8க்கு மேற்பட்ட இள வயதினர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இளம் பெண் பொலிஸ் மீது கட்டாயப்படுத்தி தகாத உறவு!! இன்ஸ்பெட்டருக்கு நடந்த கதி!!
யாழில் இளம் பெண் பொலிஸ் மீது கட்டாயப்படுத்தி தகாத உறவு!! இன்ஸ்பெட்டருக்கு நடந்த கதி!!
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலாலி பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
அவர் சனிக்கிழமை (26) துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் துஷ்பிரயோகம் குறித்து குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்திருந்ததாக பொலிஸ் தகவல்களில் தெரியவந்துள்ளது.
இதன்படி உயர் அதிகாரிகள் இந்த அதிகாரி மீது விசேட கவனம் செலுத்தி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !
“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !
இலங்கை சிறுமி அசானி தடைகள் தாண்டி மீண்டும் சரிகமப மேடையில் பாடியுள்ளார்.
ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ” என்ற பாடலை பாடும் போது தடுமாற்றத்தில் அசானி பாதியில் நிறுத்தி விடுகின்றார்.
இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தடைகளை கடந்து அனைவரது ஆதரவுகளுடனும் அசானி மீண்டும் பாடினார்.
இது குறித்த காணொளி வைரலாகி அசானிக்கு ஆதரவு குவிந்து வருகின்றது.
இதேவேளை, அவர் போட்டியாளராக நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வில்லை என்பதால் எதிர்வரும் வாரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வரா என்பது குறித்த தகவல் கிடைக்கப்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !
கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !
பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து 6 சீசன்கள் வரை ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது.
இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வந்தது. சிம்புவை அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார்.
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 7வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாகி வருகின்றன, இந்த முறை ஒரு வீடு இல்லையாம், இரண்டு வீடு உள்ளதாம்.
அந்த புதிய புரொமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் ஜனனி. இவர் பிக்பாஸ் மூலம் நல்ல ரீச் பெற்றார், இப்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார்க என்கின்றனர்.
ஆனால் இதுவரை படத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிரித்தானியாவில் நெட்வொர்க் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை: ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிப்பு | Airline Services Hit Network Problems In Uk
பிரித்தானியாவில் நெட்வொர்க் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை: ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிப்பு
பிரித்தானிய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவைகள் செயலிழந்ததால், ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.
நெட்வொர்க் பிரச்சினை
பிரித்தானியா முழுவதும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள் தொழில் நுட்பக் கோளாறு ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளின் விமானங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து புறப்படும் பயணிகள், விமான நிலையம் புறப்படும் முன் தங்கள் விமானம் புறப்படுவது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பார்த்து உறுதிசெய்துகொண்டு பின் புறப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
Airline Services Hit Network Problems In Uk
பிரச்சினை குறித்து வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறுவதென்ன?
தேசிய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான NATS வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதுகாப்பு கருதி, நாங்கள் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம்.
பொறியாளர்கள் அந்த கோளாறைக் கண்டுபிடித்து சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் ஏற்பட இருக்கும் அசௌகரியத்துக்கு வருந்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பிரச்சினையை சரி செய்ய எவ்வளவு நேரமாகும், எதனால் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.
பிரான்ஸில் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் “அபாயா” அணிய தடை
பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், 19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமுல்படுத்தியது. மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டல்களை புதுப்பிக்கவும் போராடியது.
2004ஆம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ஆம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. இந்த தடை உத்தரவுகள் அங்கு வசித்து வரும் ஐந்து மில்லியன் வலிமையான இஸ்லாமிய சமூகத்தில் சிலரைக் கோபப்படுத்தியது. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பது பிரான்சில் ஒரு பேரணியாக உள்ளது.
இந்நிலையில், “பள்ளிகளில் இனி அபாயா அணிய முடியாது என முடிவு செய்துள்ளேன்” என கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தலைவரின் முன்பாக திருமணம் செய்வதாக கூறி 7 முறை கருக்கலைப்பு செய்தார்’: சீமான் மீது நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு!
“ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, 7 முறை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து, என்னை தற்கொலைக்கு தூண்டிய சீமானை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“2011இல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சித்தேன்.
அந்த புகாரில், 2008இல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பாக சீமானின் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சீமானுக்கும் எனக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. ‘கிறிஸ்தவர் என்பதாலும் பெரியாரிஸ்ட் என்பதாலும் தாலி கட்ட மாட்டேன்’ என்றார்.
மேலும் ‘பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் வரை இதை வெளியில் கூற வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார். என்னை திருமணம் செய்து கணவராக வாழ்ந்து 7 முறை என் சம்மதம் இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்தார் சீமான். அதன் பின் என்னை ஏமாற்றிவிட்டு கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.
நான் புகாரளித்ததும், அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை.
எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல், தற்கொலை முயற்சி வழக்கு, இது தவிர புதிதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.
இந்த புகார்களை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என தற்போது தமிழர் முன்னேற்ற படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கையில்தான் எனது வாழ்வும் சாவும் உள்ளது.
சீமான் இன்று காலையில்கூட சொல்லியிருக்கிறார், அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று.
இப்படிப்பட்ட தலைவர் ஒருவர், நாம் தமிழர் என்றொரு கட்சியை நடத்திவருகிறார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதில் எனக்கு முழு ஒத்துழைப்பை வீரலட்சுமி கொடுத்து வருகிறார். ஊடகங்களால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். வீரலட்சுமி போல, சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள். 2011ஆம் ஆண்டே சீமானை கைது செய்ய வேண்டியது. ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இன்னும் கைதாகவில்லை. எனவே, சீமானை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டிருக்கிறேன்.
முன்னதாக, சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்திவைத்திருந்தோம். இப்போது அவர் திருமணம் செய்யவில்லை. கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். மதுரை செல்வம் மூலம் ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்துள்ளதாக கூறுவது மிகப் பெரிய விஷயம். எனவே, அவரை கைது செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. என்னுடைய பிரச்சினையில் அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் தான் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஈழத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதால், அதிமுக அவருக்கு ஆதரவளித்தது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் ‘11 ஆண்டுகளுக்குப் பின் இப்போது புகார் கொடுப்பதன் காரணம் என்ன?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவரை அவதூராக ஒருமையில் பேசிய விஜயலட்சுமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.




















