This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, May 3, 2024

272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம் | Srilankan Airlines Flight Makes Emergency Landing


272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
SriLankan Airlines London

லண்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்த சம்பவம் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Srilankan Airlines Flight Makes Emergency Landing

தொழில்நுட்பக்கோளாறு 

இதன்பின்னர் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியன்னாவில் இருந்து புறப்படத் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், விமானம் புறப்படும் வரை ஐரோப்பாவுக்கான வீசாவை பெற்றிருந்த அனைத்து பயணிகளையும் வியன்னா நகரில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து விமானம் நேற்று (2) லண்டன் நேரப்படி 21:30 மணி நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

நெடுங்கேணியில் வீதியில் நஞ்சருந்தி உயிர்மாய்த்த இளைஞன்; நேற்று தம்பதியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி: கள்ளக்காதல் விவகாரமா?


வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் நஞ்சருந்திய நிலையில் நடுவீதியில் குற்றுயிரக காணப்பட்ட இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணியில் நேற்று ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது சடலத்தை பார்த்த பின்னர் மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்த சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகவே, இன்றைய மரணமும் நிகழ்ந்துள்ளது.

நெடுங்கேணி, கீரிசுட்டான் பகுதியில் நேற்று (2) மில் உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. அவர் நேற்று அல்லது நேற்று முன்தினம் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

இதை தொடர்ந்து அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்தார்.

வேதாரணியன் லோகநாதன் (47), லோகநாதன் பரமேஸ்வரி (37) ஆகியோரே உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று நெடுங்கேணி- ஒதியமலை வீதியில் பெரியகுளம் வீதியில் நடுவீதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 28 வயதான கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன். அவர் லேகநாதனின் மில்லில் பணிபுரிவது கண்டறியப்பட்டது.

உயிரிழந்த இளைஞனுக்கும், மில் உரிமையாளரின் மனைவிக்கும் நெருக்கம் இருப்பதாக குறிப்பிட்டு, லோகநாதனின் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு, தம்பதியினர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தின் முன்னதாகவே, குடும்பத்துக்குள் சமரசம் ஏற்பட்டு, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். எனினும், ஓரிரு நாட்களின் முன்னர் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதியமளவில் லோகநாதனின் சகோதரனின் மகனை தொலைபேசியில் அழைத்த பரமேஸ்மரி, கணவரை காணவில்லையென்றும், வீட்டில் சென்று பார்க்குமாறும் கேட்டுள்ளார்.

எனினும், அவர் அதை மறுத்து, தான் வவுனியாவில் நிற்பதாகவும், பரமேஸ்வரியை சென்று பார்க்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பரமேஸ்வரி முச்சக்கர வண்டியில் கணவரின் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு கணவரின் சடலத்தை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், இன்று இளைஞன் உயிரை மாய்த்துள்ளார்.

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை: இன்றைய விற்பனை நிலவரம் | Gold Price In Sri Lanka Today


மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை: இன்றைய விற்பனை நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்றையதினம்(3) சடுதியாக விலை குறைவடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 684,150 ரூபாவாக காணப்படுகின்றது.24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Gold Price In Sri Lanka Today

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams)21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 172,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

கனடாவில் இரு தமிழர்கள் கைதானது ஏன்?


கனடாவில் இரு தமிழர்கள் கைதானது ஏன்?

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 04 ஆம் திகதி டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான குற்ற விசாரணையை முடித்து, யார்க் பிராந்திய காவல்துறையின் உதவியுடன் நிதிக் குற்றப்பிரிவினரால் ஒரு ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போல நடித்து தொலைபேசி அழைப்புகளைப் ஏற்படுத்தி உரியவர்களது கணக்குகள் மோசடி செய்யப்பட்டதாக நம்ப வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டைகள் மற்றும் கடவுச்சொற்களை மீட்டெடுப்பதற்காக இவர்களால் ஒரு கூரியர் (courier) அனுப்பப்பட்டு பெறப்பட்டுள்ளது.

பின்னர் அவை மோசடியான கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் D/Cst ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வடிவேலு பாணியில் பஸ்ஸை மறித்து மிரட்டியது யார்?


யாழில் வடிவேலு பாணியில் பஸ்ஸை மறித்து மிரட்டியது யார்?

நேற்றையதினம் காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை வலந்தலை சந்தியில் மறித்து கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தனிநபர் ஒருவரும் மறித்து மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவருடைய பேருந்தையே இவ்வாறு வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்தானது முதன்முறையாக நேற்றையதினம் காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து சேவையினை ஆரம்பித்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைநகர் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். அத்துடன் குறித்த சங்கத்தினர் நேற்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.

குறித்த வழித்தட பகுதியில் வசிப்பவர்களுக்கே வழித்தட அனுமதி வழங்கப்பட்டு வருவது தனியார் சிற்றூர்தி உரிமையாளர் சங்கத்தின் யாப்பு நடைமுறையாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த வழித்தடப் பகுதி தவிர்ந்த பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு வழித்தட அனுமதியும் நேர அட்டவணையும் வழங்கப்பட்டமையாலேயே இவ்வாறு காரைநகர் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பை
வெளியிட்டனர்.

எனினும் இவ்வாறான வரையறை இலங்கை சட்டத்தில் காணப்படாமையினால் இலங்கை போக்குவரத்து அதிகார சபையினர் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தானது நேற்றையதினம் சேவையில் ஈடுபட்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மிரட்டலை விடுத்தவர்கள் யார் என வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, May 2, 2024

நாட்டில் வேகமாக பரவி வரும் நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | A Disease That Is Spreading Rapidly In The Country


நாட்டில் வேகமாக பரவி வரும் நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் இருகின்ற 65 இடங்களை தெரிவு செய்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி  

மாதேல்கமுவ, நெதகமுவ, பத்தடுவன, நில்பனகொட, ஹொரம்பெல, உடுகம்பொல, மெதகம்பிட்டிய தெவொல பொல, வோகொச்சிய, மாரபொல, யட்டியான, கொரச, வீதியவத்த, அஸ்கிரிய, கல்ஒலுவ ஆகிய பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இந்த அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 17 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சலுக்கு எதிரான பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.     

இங்கிலாந்தில் பழைய வீடு வாங்கிய தம்பதிக்கு அடித்த அதிஷ்டம் : சமையலறையில் கிடைத்த புதையல் | Uk Couple Discovers Over 1000 17Th Century Coins


இங்கிலாந்தில் பழைய வீடு வாங்கிய தம்பதிக்கு அடித்த அதிஷ்டம் : சமையலறையில் கிடைத்த புதையல்

இங்கிலாந்தில் பழைய வீடொன்றை வாங்கி அதன் சமையலறையை புதுப்பித்த தம்பதிக்கு தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்ததில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள தெற்கு போர்டான் பகுதியை சேர்ந்த பெக்கி- ராபர்ட் தம்பதிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.

சமையல் அறையின் தரைப்பகுதியை 

இவர்கள் சமையலறையை திருத்தம் செய்யும் வகையில் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது. அதில் மேல் பகுதி முழுவதும் மண் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றை விலக்கி பார்த்தபோது பானை முழுவதும் தங்க காசுகளும், வெள்ளி காசுகளும் இருந்தன.

Uk Couple Discovers Over 1000 17Th Century Coins

மொத்தம் 1,029 நாணயங்கள்

ராபர்ட் அவற்றை எண்ணினார். மொத்தம் 1,029 நாணயங்கள் இருந்தன. அவை 1642-ம் ஆண்டுக்கும், 1644-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் மன்னர்களின் உருவம் பதித்த நாணயங்கள் ஆகும்.

புதையல் கிடைத்த மகிழ்ச்சியை அந்த தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். பின்னர் அவை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது.

மகனின் படிப்புக்கும், வீட்டை புதுப்பிக்கவும்

அதன் மூலம் தம்பதிகளுக்கு 60 ஆயிரம் பவுன்ட் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை தனது மகனின் படிப்புக்கும், வீட்டை புதுப்பிக்கவும் பயன்படுத்த உள்ளதாக தம்பதியினர் தெரிவித்தனர். 

வடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள் : தப்பி வந்த பெண் அதிர்ச்சி தகவல் | Kim Jong Un Handpicks 25 Pretty Girls Every Year


வடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள் : தப்பி வந்த பெண் அதிர்ச்சி தகவல்

வடகொரியாவில் இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:

அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பாடசாலைக்கு சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள். ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான்.

தெரிவு செய்யப்படும் பெண்களின் பின்புலம்

அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.

Kim Jong Un Handpicks 25 Pretty Girls Every Year

பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர்கள் கன்னிப்பெண்களா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஒரு சில பெண்கள் மட்டுமே பியாங்யாங்கிற்கு

கடுமையான சோதனைக்குப் பிறகு, வட கொரியா முழுவதிலும் இருந்து ஒரு சில பெண்கள் மட்டுமே பியாங்யாங்கிற்கு அனுப்பப்படுகிறார்கள், அங்கு சர்வாதிகாரியின் ஆசைகளை பூர்த்தி செய்வதே அவர்களின் ஒரே நோக்கம்.

Kim Jong Un Handpicks 25 Pretty Girls Every Year

இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும். 3-வது குழு சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும்.

எப்படி மகிழ்விப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்

இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள். மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் கீழ்நிலை ஜெனரல்கள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.

"இன்ப அணிக்காக" இரண்டு முறை தான் தேடப்பட்டதாகவும் ஆனால் அவரது குடும்ப நிலை காரணமாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை மனைவி தற்கொலை!


வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை மனைவி தற்கொலை!

வவுனியா நெடுங்கேணி் கிரிசுட்டான் பகுதி வீடோன்றில இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இதேவேளை குறித்த நபரின் மனைவியான 37வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அண்மைகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது

மனைவியின் சடலம் வவுனியா பொதுவைத்தியசலைக்கு கொண்டுவரப்பட்டு உடன்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கணவனின் சடலம் விசாரனைகளின் பின்னர் உடற்கூற்றி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் 

மேலதிக விசாரனைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மன்னாரில் போதைப்பொருள் வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்!


தலைமன்னார் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சுமார் பத்து கோடி பெறுமதியான சொத்து இன்று முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் இரண்டு இரு மாடி வீடுகள், நான்கு கடைகள், சொகுசு கார் ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரும் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

கடந்த சில வருடங்களாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் படி 2010 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மீன்பிடி படகுகள் ஊடாக பல்வேறு போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியை பெற்று வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிசாரினால் தற்காலிகமாக 7 நாட்கள் சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு, சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.