வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் நஞ்சருந்திய நிலையில் நடுவீதியில் குற்றுயிரக காணப்பட்ட இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணியில் நேற்று ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது சடலத்தை பார்த்த பின்னர் மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்த சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகவே, இன்றைய மரணமும் நிகழ்ந்துள்ளது.
நெடுங்கேணி, கீரிசுட்டான் பகுதியில் நேற்று (2) மில் உரிமையாளரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. அவர் நேற்று அல்லது நேற்று முன்தினம் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.
இதை தொடர்ந்து அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்தார்.
வேதாரணியன் லோகநாதன் (47), லோகநாதன் பரமேஸ்வரி (37) ஆகியோரே உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று நெடுங்கேணி- ஒதியமலை வீதியில் பெரியகுளம் வீதியில் நடுவீதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 28 வயதான கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன். அவர் லேகநாதனின் மில்லில் பணிபுரிவது கண்டறியப்பட்டது.
உயிரிழந்த இளைஞனுக்கும், மில் உரிமையாளரின் மனைவிக்கும் நெருக்கம் இருப்பதாக குறிப்பிட்டு, லோகநாதனின் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு, தம்பதியினர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தின் முன்னதாகவே, குடும்பத்துக்குள் சமரசம் ஏற்பட்டு, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். எனினும், ஓரிரு நாட்களின் முன்னர் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியமளவில் லோகநாதனின் சகோதரனின் மகனை தொலைபேசியில் அழைத்த பரமேஸ்மரி, கணவரை காணவில்லையென்றும், வீட்டில் சென்று பார்க்குமாறும் கேட்டுள்ளார்.
எனினும், அவர் அதை மறுத்து, தான் வவுனியாவில் நிற்பதாகவும், பரமேஸ்வரியை சென்று பார்க்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, பரமேஸ்வரி முச்சக்கர வண்டியில் கணவரின் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு கணவரின் சடலத்தை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இன்று இளைஞன் உயிரை மாய்த்துள்ளார்.
0 comments:
Post a Comment