நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, May 2, 2024

மன்னாரில் போதைப்பொருள் வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்!


தலைமன்னார் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சுமார் பத்து கோடி பெறுமதியான சொத்து இன்று முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் இரண்டு இரு மாடி வீடுகள், நான்கு கடைகள், சொகுசு கார் ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரும் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

கடந்த சில வருடங்களாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் படி 2010 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மீன்பிடி படகுகள் ஊடாக பல்வேறு போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியை பெற்று வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிசாரினால் தற்காலிகமாக 7 நாட்கள் சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு, சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job