This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, May 4, 2024

அமெரிக்காவில் நீரிழிவு நோயாளிகள் கொலை:தாதியருக்கு அதிரடி தீர்ப்பு | Usa Nurse 760 Years Jail Who Injected Insulin


அமெரிக்காவில் நீரிழிவு நோயாளிகள் கொலை:தாதியருக்கு அதிரடி தீர்ப்பு!
நீரிழிவு நோயில்லாதவர்களுக்கு இன்சுலின்(Insulin)செலுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் தாதியர்  ஒருவருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரஸ்தி என்ற தாதியருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாதியர் உயிரிழக்கும் அளவுக்கு இன்சுலின் செலுத்தி 17க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறைத்தண்டனை

இச்சம்பவம் குறித்து அமெரிக்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு இன்சுலின் செலுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

Usa Nurse 760 Years Jail Who Injected Insulin

இதனையடுத்து அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மட்டுமின்றி 380 முதல் 760 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மேலும் இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள தாதியர், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

 இதன் காரணத்தினாலேயே அதிக டோஸ் இன்சுலினை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகர் முஸ்லீம் பகுதிக்குள் கள்ள மாடு அறுக்கும் இடம் சுற்றி வளைக்கபட்ட காட்சிகள் இவை!!


யாழ் நகர் முஸ்லீம் பகுதிக்குள் கள்ள மாடு அறுக்கும் இடம் சுற்றி வளைக்கபட்ட காட்சிகள் இவை!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடத்தில், பாழடைந்த கட்டடம் ஒன்றில், களவாக பிடிக்கப்படும் மாடுகள் மற்றும் ஆடுகளை வெட்டி இறைச்சியாக விற்று வந்த நிலையில், பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து லீலைகள் புரிந்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள்தான்!!


கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து லீலைகள் புரிந்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள்தான்!!

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவரை Durham பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் Ajax நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம் | World Record Award For Dmdk Vijayakanth Memorial


விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்
மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின்(Vijayakanth) நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாக இது போற்றப்படுகிறது.

விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.தொடர்ந்து, அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உலக சாதனை விருது

அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தற்போது வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

World Record Award For Dmdk Vijayakanth Memorial

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு(Chennai) பயணம் மேற்கொள்ளும் மக்கள் நிச்சயம் விஜயகாந்தின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தி வருவதோடு மேலும் பலர் முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்களுக்காக நினைவு இடத்தில் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் நினைவிடம்

இந்த நிலையில் தான் விஜயகாந்தின் நினைவிடத்தில் இதுவரை 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதனை உலக சாதனையாக அங்கீகரித்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவு சின்னமாகவும் விஜயகாந்தின் நினைவு இடம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடு பிடிக்கும் இந்திய கனேடிய உறவு : ஹர்தீப் சிங் கொலை தொடர்பில் மூன்று இந்தியர்கள் கைது! | Three Indians Arrested For Hardeep Singhs Murder


சூடு பிடிக்கும் இந்திய கனேடிய உறவு : ஹர்தீப் சிங் கொலை தொடர்பில் மூன்று இந்தியர்கள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார்[Hardeep(Singh Nijar) (வயது 45), கனடாவில் கடந்த 2023 ஜுன் மாதம் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்நக் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து மூன்று இந்தியர்களை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

அவர்கள் மூன்று பேரும் அல்பெர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் (non-permanent residents) என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.

மூன்று பேர் அந்தக் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பேசிய கனடா காவல்துறை துணை ஆணையர் டேவிட் திபோல் (David Teboul), விசாரணை தொடர்வதாக தெரிவித்தார்.

கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறதா 

அந்த மூன்று பேர் தொடர்பாக மட்டுமன்றி கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

Three Indians Arrested For Hardeep Singhs Murder

“இந்த விசாரணை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இந்தக் கொலையுடன் வேறு சிலருக்கும் தொடர்பிருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்துக் கைது செய்வதில் நாங்கள் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் அரச கனடிய காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் டேவிட் டெபவுல்.

 பிரிட்டிஷ் கொலம்பியாவை

அல்பெர்ட்டாவில் உள்ள எட்மோண்டன் நகரில் மூன்று இந்திய நாட்டவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏப்ரல் 6ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைவர்.

இந்தக் கொலைக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே உறவு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிரு்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, May 3, 2024

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் குணம் என்ன தெரியுமா? | Most Admirable Qualities Of People Born In May


மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் குணம் என்ன தெரியுமா?
எண் கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறந்த திகதிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதை போல் அவர்கள் பிறக்கும் மாதமும் தாக்கம் செலுத்துகின்றது.

அந்த வகையில் மே மாததில் பிறந்தவர்கள் பற்றிய சில சுவாரஸ்யமான விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Most Admirable Qualities Of People Born In May

விசேட ஆளுமைகளும் குணங்களும்...

தங்களை ஊக்கப்படுத் வேறு யாரையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் இவர்களே இவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கி செல்லக்கூடிய தன்மை கொண்டவர்கள்.

நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Most Admirable Qualities Of People Born In May

மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே ஒரு வசீகர தன்மை இருக்கும். இவர்களை கடப்பவர்கள் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு நெடியில் ஈர்க்க்கூடிய முகம் மற்றும் கண்களை கொண்டிருப்பார்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்தகூடியவர்களாக இருப்பார்கள்.

உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுமுறையை பின்பற்றுவதால் அபாயகரமான நோய்களின் தாக்கத்தில் இவர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.

Most Admirable Qualities Of People Born In May

இயல்பாகவே தலைமைத்துவ பண்புகளை கொண்ட இவர்களுக்கு வாழ்வில் நல்ல வேலை, பதவி உயர்வு , சம்பள உயர்வு என்பன அடிக்கடி கிடைக்கும். 

மே மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம்  பொருட்படுத்தாமல் தங்களின் லட்சிய பாதையில் பிடிவாதமாக சென்று வெற்றியடைவார்கள்.

இவர்களுக்கு அனைத்து துறைசார்ந்த அறிவும் இருக்கும். எதையும் தெரியாது என சொல்லாமல் தெரிந்துக்கொள்ளலாம் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Most Admirable Qualities Of People Born In May

மே மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் வார்த்தைகளில் வசீகரத்தன்மை இயல்பாகவே இருக்கும். இவர்களின் பேச்சாற்றலை இவர்களின் எதிரிகளும் கூட விரும்புவார்கள்.  

மே மாதம் பிறந்தவர்களுக்கு பச்சை ரத்தினம் பதித்த ஆபரணங்கள் மேலும் அதிர்ஷ்டத்தை  கொடுக்கும். இவர்கள் பச்சை ரத்தினம் அணிந்தால் பணத்திற்கு தட்டுப்படு ஏற்படாது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்: சந்தேகிக்கும் அரசாங்கம் | Harin Clears About Katunayake Airport Visa Issue


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்: சந்தேகிக்கும் அரசாங்கம்

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதந்த வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் நாசகார செயலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் இன்று ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ளார்

Harin Clears About Katunayake Airport Visa Issue

இதன்போது இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வீசா வழங்கும் செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி நியமிக்கும் குழு

உலகளாவிய ரீதியில் செயற்படுவதால் ‘VFS Global’ நிறுவனமானது அதிகளவிலான இடத்தைப் பெற்றுள்ளதாகவும், சுற்றுலா ஊக்குவிப்புச் சேவைகளுக்காக, குறித்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான வீசா கட்டணம் குறைக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர், தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி நியமிக்கும் குழுவின் ஊடாக, அது தீர்மானிக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

எனினும் தம்மை பொறுத்தவரை 67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசி பலன்கள்



இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை 21 ஆம் நாள் (2024 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள்).

ஒவ்வொரு நாளையும் தொடங்க முன்னர் அந்த நாளுக்கான ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம், அந்த நாள் ஒருவருக்கும் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கமைய, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம் மற்றும் திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.       

மேஷம்

இந்த ராசிக்காரருக்கு பலன்கள் திருப்தி அளிக்காது. ஆன்மீக காரியங்களில் ஈடுபடுங்கள். பக்திப் பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும். இதனால் அமைதி கிடைக்கும். பணியிடச் சூழல் சுமூகமாக காணப்படாது. உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் அகந்தைப் பிரச்சினை காணப்படும். இது இருவருக்கும் இடையேயான உறவை பாதிக்கும் என்பதால் இத்தகைய உணர்வை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. அதிக செலவுகள் காணப்படும். அதை உங்களால் நிர்வகிக்க இயலாது. பாதங்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சியும் மருத்துவமும் குணமடைய உதவும்.

ரிஷபம்

மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். அதிர்ஷ்டம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி மேற்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீங்கள் பங்கு வர்த்தகங்களில் பங்கு பெறுவதன் மூலம் பண வரவும் லாபமும் காணலாம். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியமான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக யாருக்கும்.

மிதுனம்

சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும். உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

கடகம்

நீங்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். தடைகளை சமாளித்து நன்மை காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். அமைதியைப் பராமரிக்க இத்தகைய நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்

வெறுமை உணர்வு காணப்படும். வேதனை தரும் சூழ்நிலை காணப்படும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சமநிலை இழப்பீர்கள். திரைப்படம் பார்த்தல் அல்லது இசை கேட்டல் போன்ற நிகழ்சிகளின் மூலம் ஆறுதல் கிடைக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை காணப்படாது. அதிக வேலைகள் உங்களுக்கு வருத்தம் அளிக்கும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். இது நல்ல புரிந்துணர்விற்கு தடையாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்லிணக்கம் பராமரிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இருக்கும் பணத்தை விவேகமான முறையில் செலவழிக்க வேண்டும். 

கன்னி

உங்களுக்கு செழிப்பான நாள். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக மேற்கொள்வீர்கள். அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து மகிழ்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலை அதிர்ஷ்டகரமாக இருக்கும். பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் லாபம் காணலாம். மனதில் காணப்படும் நம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.  

விருச்சிகம்

உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை. திறம்பட திட்டமிட வேண்டும். இறைவழிபாடு ஆறுதலை பெற்றுத் தரும். பணிகள் கடினமாக காணப்படும். சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் அன்பும் பாராட்டும் பெற நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உறவை பாதிக்கும் என்பதால் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும். சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு

உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகளை சமாளிக்க நேரலாம். நீங்கள் இந்தச் சவால்களை உறுதியுடனும் திடமான மனநிலையுடனும் சமாளிக்க வேண்டும். அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும். பணியின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிக பணிகள் காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும். வீட்டுப் புனரமைப்பு மற்றும் நிர்மாணம் குறித்த அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

மகரம்

உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சியில் எளிதாக வெற்றி காணும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் திறமை மிகவும் பாராட்டப்படும். உங்கள் செயல்திறனில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். நீங்கள் உங்கள் துணையிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பண வரவிற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரும். உங்களிடத்தில் சிறந்த ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.

கும்பம்

உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலாம். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். அமைதியாகவும் சுமூகமாகவும் இருப்பதன் மூலம் உறவில் நல்லிணக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்கள் மன நிலையில் மாற்றம் வேண்டும். பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை அனுபவிக்கும் நிலையில் இருக்க மாட்டீர்கள். 

மீனம்

திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளதால் கடினமான சூழ்நிலை காணப்படும். இழப்பு ஏற்படாமல் இருக்க உங்கள் மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனவே உங்கள் பணிகளை கவனமுடன் ஆற்ற வேண்டும். பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது. பண வரவு மகிழ்சிகரமாக இருக்காது. நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். நிதி விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் | Gce O L Examination Exam Admit Card Issue


சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E. (O/L) EXAMINATION) இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்தை உள்ளடக்கிய பரீட்சை அனுமதி சீட்டுகளைப் பெற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவிடம் தெரிவிக்கையில், ​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்கள்

இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் படி, 452,979 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர் அவர்களில் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

யாழில் காதலியின் வீட்டுக்குச் சென்று துாக்கில் தொங்கிய சஞ்சிதன்!! நடந்தது என்ன?


யாழில் காதலியின் வீட்டுக்குச் சென்று துாக்கில் தொங்கிய சஞ்சிதன்!! நடந்தது என்ன?

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் காதலி வீட்டில் தூக்கில் தொங்கி இளைஞன் உயிர்மாய்த்துள்ளார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிறீவரதன் சஞ்சிதன் (22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரை மாய்த்த இளைஞனும், காதலியும் சில காலமாக காதலித்து வருகிறார்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் அவர் காதலித்து வருகிறார்கள். இந்த இளைஞன் அடிக்கடி காதலி வீட்டிற்கு சென்று தங்குவதுமுண்டு.

நேற்று இரவும் காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும், அதிகாலை 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரை காதலி கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாயார் குறிப்பிட்டார்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடந்தது. அது தற்கொலை மரணமென்பது உறுதி செய்யப்பட்டு, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.