நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, May 4, 2024

அமெரிக்காவில் நீரிழிவு நோயாளிகள் கொலை:தாதியருக்கு அதிரடி தீர்ப்பு | Usa Nurse 760 Years Jail Who Injected Insulin


அமெரிக்காவில் நீரிழிவு நோயாளிகள் கொலை:தாதியருக்கு அதிரடி தீர்ப்பு!
நீரிழிவு நோயில்லாதவர்களுக்கு இன்சுலின்(Insulin)செலுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் தாதியர்  ஒருவருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரஸ்தி என்ற தாதியருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாதியர் உயிரிழக்கும் அளவுக்கு இன்சுலின் செலுத்தி 17க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறைத்தண்டனை

இச்சம்பவம் குறித்து அமெரிக்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு இன்சுலின் செலுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

Usa Nurse 760 Years Jail Who Injected Insulin

இதனையடுத்து அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மட்டுமின்றி 380 முதல் 760 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மேலும் இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள தாதியர், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

 இதன் காரணத்தினாலேயே அதிக டோஸ் இன்சுலினை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment