யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் காதலி வீட்டில் தூக்கில் தொங்கி இளைஞன் உயிர்மாய்த்துள்ளார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிறீவரதன் சஞ்சிதன் (22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரை மாய்த்த இளைஞனும், காதலியும் சில காலமாக காதலித்து வருகிறார்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் அவர் காதலித்து வருகிறார்கள். இந்த இளைஞன் அடிக்கடி காதலி வீட்டிற்கு சென்று தங்குவதுமுண்டு.
நேற்று இரவும் காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும், அதிகாலை 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரை காதலி கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாயார் குறிப்பிட்டார்.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடந்தது. அது தற்கொலை மரணமென்பது உறுதி செய்யப்பட்டு, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment